மம்முட்டி மற்றும் விநாயகன் நடிப்பில் வெளியானது கலம்காவல் டீசர்!
Kalamkaval Official Teaser | மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மம்முட்டி. இவரது நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கலம்காவல். இந்தப் படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

கடந்த 1971-ம் ஆண்டு முதல் மலையாள சினிமாவில் நடிகராக நடித்து வருபவர் நடிகர் மம்முட்டி. ஆரம்ப காலக்கட்டத்தில் சினிமாவில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் மம்முட்டி 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1981-ம் ஆண்டு முதல் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். சினிமாவில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் நடிகர் மம்முட்டி தற்போது உள்ள இளம் தலைமுறையினருக்கு போட்டியாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 70 வயதிற்கு மேலாக இருக்கும் மம்முட்டியைப் பார்த்தால் யாரும் அவருக்கு இவ்வளவு வயது இருக்கும் என்று யூகிக்க முடியாத அளவிற்கு தனது உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடிக்கும் நடிகர் மம்முட்டி பல நூறு படங்களில் நடித்துள்ளார்.
இவர் மலையால சினிமாவில் மட்டும் இன்றி தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து நடித்துள்ளார். இதில் மலையாளத்திற்கு அடுத்தப்படியாக தமிழில் நடிகர் மம்முட்டி பலப் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழில் கடந்த 1990-ம் ஆண்டு வெளியான மௌனம் சம்மதம் படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவர் தொடர்ந்து அழகன் மற்றும் தளபதி முதல் பேரன்பு வரை 16 படங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமாவில் நடிகர் மம்முட்டியின் படங்கள் எப்படி வரவேற்பைப் பெறுகின்றதோ அதே போல தமிழ் சினிமாவில் இவரது நடிப்பில் வெளியாகும் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.




இணையத்தில் கவனம் பெறும் கலம்காவல் படத்தின் டீசர்:
இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து நடிகர் மம்முட்டி நட்டிப்பில் இதுவரை டாம்னிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் மற்றும் பசூகா ஆகிய இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து நடிகர் மம்முட்டி நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கலம்காவல். க்ரைம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் ஜித்தின் கே ஜோஷ் இயக்கி உள்ளார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி உடன் இணைந்து நடிகர்கள் துல்கர் சல்மான், விநாயகன், மீரா ஜாஸ்மின்,ஜிபின் கோபிநாத், காயத்ரி அருண், ரஜிஷா விஜயன் மற்றும் ஆர்.ஜே சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ள நிலையில் படத்தின் டீசரை தற்போது வெளியிட்டுள்ளது.
Also Read… ஐடி ஊழியரை கடத்தி அடித்து துன்புறுத்திய விவகாரம் – நடிகை லட்சுமி மேனன் மீது வழக்குப் பதிவு
கலம்காவல் படக்குழு வெளியிட்ட எஸ் தள பதிவு:
Every story has a side you don’t expect 🔥 Presenting the Official teaser of #Kalamkaval.
Watch Teaser : https://t.co/ijbXoPjdKu#Mammootty @mammukka #Vinayakan #MammoottyKampany #JithinKJose @SamadTruth #WayfarerFilms #TruthGlobalFilms #Kalamkaval pic.twitter.com/8sNTeJe0fI
— MammoottyKampany (@MKampanyOffl) August 28, 2025
Also Read… தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தில் பிரபல நடிகர் தொடபான காட்சிகள்?