Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இட்லி கடை படத்திலிருந்து எஞ்சாமி தந்தானே பாடலின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

Idly Kadai Movie Update: நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் இட்லி கடை. இந்தப் படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இட்லி கடை படத்திலிருந்து எஞ்சாமி தந்தானே பாடலின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
இட்லி கடைImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Aug 2025 22:20 PM

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டும் இன்றி இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் என அனைத்து துறைகளிலும் சாதித்து வருகிறார் தனுஷ். இவர் நாயகனாக நடித்தப் படங்கள் ஹிட்டாவது மட்டும் இன்றி இவர் இயக்குநராக இயக்கியப் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் இயக்குநராக அறிமுகம் ஆன படம் பவர் பாண்டி. இந்தப் படத்தில் இவர் நடிகராகவும் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, மடோனா செபாஸ்டின், திவ்ய தர்ஷினி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் நடிகர் தனுஷ் இயக்கிய முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது அவர் அடுத்தடுத்து படங்களை இயக்க உந்துதலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக அவரது 50-வது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையைத்து இருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி இருந்தார். இதில் அவர் நடிக்கவில்லை என்றாலும் இளைஞர்களின் காதலை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இட்லி கடை படத்தின் இரண்டாவது சிங்கிளின் க்ளிம்ஸ் வீடியோ இதோ:

இந்த நிலையில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கும் படம் இட்லி கடை. இந்தப் படத்தில் நாயகனாகவும் நடிகர் தனுஷ் நடித்துள்ளார். படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிள் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து படத்தின் இரண்டாவது சிங்கிள் வீடியோ நாளை 27-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் பாடலின் க்ளிம்ஸ் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… Karthi : மனதால் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காத நபர்.. ரவி மோகன் குறித்து கார்த்தி உருக்கம்!

இட்லி கடை படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள வீடியோ:

Also Read… சந்தோஷ் சுப்ரமணியம் ஹிட் சீனை ரீ கிரியேட் செய்த ஜெனியா – ரவி மோகன்