Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விஜயகாந்த்தின் 73வது பிறந்தநாள்… மரியாதையை செலுத்திய தென்னிந்திய நடிகர் சங்கம்

Vijayakanths 73th Birthday :தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தவர் விஜயகாந்த். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு உடல்நல குறைவினால் காலமானார். இந்நிலையில், இன்று அவரது 73வது பிறந்தநாள் என்ற நிலையில்,தென்னிந்திய நடிகர் சங்கத்தினர், விஜயகாந்தின் புகைப்படத்திற்கு மரியாதையை செலுத்தியுள்ளனர்.

விஜயகாந்த்தின் 73வது பிறந்தநாள்… மரியாதையை செலுத்திய தென்னிந்திய நடிகர் சங்கம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தினர்கள்
Barath Murugan
Barath Murugan | Published: 25 Aug 2025 21:13 PM

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் தமிழகத்தின் சிறந்த அரசியவாதிகளில் ஒருவராக இருந்து வந்தவர் நடிகர் விஜயகாந்த் (Vijayakanth). இவர் 80ஸ் மற்றும் 90ஸ் சினிமா காலகட்டத்தில் பிரபல நடிகராக இருந்து வந்தார். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருந்தது. அந்த வகையில் இவரின் நடிப்பில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான படம் கேப்டன் பிரபாகரன் (Captain Prabhakaran). இந்த படமானது சுமார் 34 வருடங்களுக்கு பின், கடந்த 2025, ஆகஸ்ட் 22 ஆம் தேதியில் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. இந்த படத்தின் ரீ-ரிலீசிற்கு பல மக்கள் திரையரங்குகளில் குவிந்திருந்தனர் என கூறப்படுகிறது . அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் என்றும் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் விஜயகாந்த்.

இந்நிலையில், இன்று 2025, ஆகஸ்ட் 25ம் தேதியில் அவரின் 73வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் விஜயகாந்த் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பத் மாதம் உடல்நல குறைவினால் காலமானார். இந்நிலையில், இன்று அவரின் 73வது பிறந்தநாளிற்கு அவருக்கு மரியாதையை செலுத்தும் விதத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத்தினர், அவரின் புகைப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதையை செலுத்தியுள்ளனர். மேலும் தளபதி விஜய்யும் (Thalapathy Vijay) வாழ்த்து பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : SK- வின் பண்ணா.. நான் வின் பண்ண மாறி.. எமோஷனலாக பேசிய அனிருத்!

விஜயகாந்திற்கு மரியாதையை செலுத்திய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வீடியோ :

நடிகரும் அரசியல் கட்சி தலைவராக இருந்து வந்த விஜயகாந்த், கடந்த 2023 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில், இவரின் 73வது பிறந்தநாளை குறித்து, தளபதி விஜயும் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதத்தில் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுவும் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : நார்த் அமெரிக்காவில் வசூலில் புதிய வரலாறு படைத்த கூலி படம்!

விஜயகாந்தின் 73வது பிறந்தநாளிற்கு வாழ்த்து தெரிவித்து பதிவை வெளியிட்ட தளபதி விஜய் :

தளபதி விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் விஜயகாந்த்தின் பங்கு மிக முக்கியமானது. நடிகர் விஜய் ஹீரோவாக இரண்டாவது படமான செந்தூர பாண்டி படத்தில் விஜயகாந்த் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் தான் நடிகராக விஜய்யை மக்களிடையே கொண்டு சேர்த்தது. மேலும் குழந்தை நட்சத்திரமாகவும் விஜயகாந்த்துடன் பல படங்களில் நடித்துள்ளார் விஜய்.  வெற்றி, குடும்பம், வசந்த ராகம் போன்ற படங்களில் நடிகர் விஜயகாந்துடன் இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதத்தில் தளபதி விஜய் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.