இணையத்தில் வைரலாகும் கேப்டன் பிரபாகரன் படத்தின் ட்ரெய்லர்!
Captain Prabhakaran Movie: மறைந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜய்காந்தின் பிறந்த நாள் இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு விஜயகாந்த் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த கேப்டன் பிரபாகரன் படத்தை ரீ ரிலீஸ் செய்ய உள்ளனர்.

தமிழ் சினிமா ரசிகர்களாலும் சினிமா பிரபலங்களாலும் அன்புடன் கேப்டன் என்று அழைக்கப்படுபவர் விஜயகாந்த் (Captain Vijayakanth). இவர் சினிமாவில் மட்டும் இன்றி தமிழக அரசியலில் களம் இறங்கி எதிர்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். தமிழ் சினிமாவில் பல நூறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நடிகர் விஜய்காந்த் மற்ற மொழிகளில் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையுடன் கடைசி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற பாடலின் வரிகளுக்கேற்ப வாழ்ந்தவர் விஜயகாந்த் என்று சொல்லலாம். அதனால்தான் அவர் உயிரிழந்த போது திரைத்துறையுனரும், குடும்பத்தினரும் அவரது ரசிகர்களையும் தாண்டி தமிழகத்தில் உள்ள அனைவரும் வருத்தம் அடைந்தனர். அவரின் வாழ்க்கை அப்படி இருந்ததே அதற்கு காரணம்.
விஜயகாந்தின் மறைவிற்கு பிறகு திரைப்படங்களில் பலவற்றில் அவரின் நினைவாக அவர் நடிப்பில் வெளியான காட்சிகளை வைப்பது, அவரது படங்களில் வந்த சூப்பர் ஹிட் பாடல்களை வைப்பது என்று ஒவ்வொருவரும் அவர் அவர் பாணியில் விஜயகாந்திற்கு தொடர்ந்து இரங்கல்களை தெரிவித்து வந்தனர்.




விஜயகாந்தின் பிறந்த நாள் சிறப்பாக ரீ ரிலீஸ் ஆகும் கேப்டன் பிரபாகரன்:
இந்த நிலையில் வருகின்ற 25-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு விஜயகாந்தின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த பிறந்த நாள் சிறப்பாக விஜயகாந்த் நடிப்பில் 100-வது படமாக உருவான கேப்டன் பிரபாகரன் படத்தை 4கே வடிவில் ரீ ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருந்தது.
அதன்படி படம் வருகின்ற 22-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் 4கே ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரைப் பார்த்த அவரது ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… நடிகர்கள் சூர்யா – ஜோதிகா குழந்தைகளுக்கு பிடித்த நடிகர் இவரா?
இணையத்தில் கவனம் பெறும் ட்விட்டர் பதிவு:
New 4K Trailer 🔥
அரங்கம் அதிர வைக்க வர்றார் கேப்டன் 😎https://t.co/OAnQiZ9vOH pic.twitter.com/u8kN9OXeJN
— Nandhan Talkz ✨ (@Nandhan_Talkz) August 8, 2025
Also Read… மகன் சஞ்சய் குறித்து சுவாரஸ்யமாக பேசிய விஜய்… என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?