Mammootty: சினிமாவில் 50 ஆண்டுகள்.. ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த மம்முட்டி
Mammootty Congratulates Rajinikanth : மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் மம்முட்டி. இவர் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சினிமாவில் தனது 50 வருடத்தை நிறைவு செய்த நிலையில், அவருக்கு மம்முட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் எல்லாம் திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் 171வது இப்படமான வெளியாகியிருப்பது கூலி (Coolie). லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் வெளியான இப்படமானது, மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த 2025ம் ஆண்டோடு நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் தனது 50-வது வருடத்தை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில், இதற்குப் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் எனப் பலரும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் விதத்தில்,மலையாள நடிகர் மம்முட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த கூலி படத்தின் வெளியீட்டை முன்னிட்டு அவர் வாழ்த்தியிருக்கிறார். சினிமாவில் ரஜினிகாந்த் சுமார் 50 வருடத்தை நிறைவு செய்திருக்கும் நிலையில், கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் உட்பட பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் வாழ்த்தியிருந்தனர். இந்நிலையில், தற்போது மம்முட்டி வெளியிட்ட பதிவும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : சினிமாவில் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதை விட அதுதான் ரொம்ப பிடிக்கும் – நடிகர் அர்ஜுன் ஓபன் டாக்
ரஜினிகாந்த்தின் 50வருட நிறைவு குறித்து மம்முட்டி வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Heartfelt congratulations to dear @rajinikanth on completing 50 glorious years in cinema. It was truly an honour to share the screen with you. Wishing you the very best for #Coolie. Keep inspiring and shining always. pic.twitter.com/EG8GPD4vzS
— Mammootty (@mammukka) August 13, 2025
இந்த எக்ஸ் பதிவில் மலையாள நடிகர் மம்முட்டி, ரஜினிகாந்தை வாழ்த்தியிருக்கிறார். மேலும் கூலி திரைப்படத்தின் வெற்றிக்கும் வாழ்த்தியுள்ளார். மேலும் தொடர்ந்து எப்போதுமே, உத்வேகமாகவும் பிரகாசமாகவும் இருக்கவேண்டும் என்று அவர் அந்த எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். தற்போது இந்த பதிவானது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : திரையரங்குகளில் வெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படம்… FDFS பார்க்க வந்த பிரபலங்கள்!
ரஜினிகாந்த்துடன் மம்முட்டி நடித்த திரைப்படம் :
நடிகர் மம்முட்டி தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பேரன்பு, மவுனம் சம்மதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்திருந்த படம் தளபதி. கடந்த 1991ம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்குநர் மணி ரத்னம் இயக்கியிருந்தார். இந்த படத்தில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் உயிர்த் தோழனாக மம்முட்டி நடித்திருந்தார். இந்த படமானது இன்று வரையிலும் ரசிகர்களால் போற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.