Rukmini Vasanth : சிவகார்த்திகேயனை ஒரே வார்த்தையில் அப்படி சொல்லலாம்.. ருக்மிணி வசந்த் பேச்சு!
Rukmini Vasanth About Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மிணி வசந்தின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மதராஸி. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து ருக்மிணி வசந்த் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் வரும் 2025 செப்டம்பர் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியீட்டிற்கு தயாராகிவரும் படம் மதராஸி (Madharaasi). இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தை தமிழ் பிரபல இயக்குநரான ஏ.ஆர். முருகதாஸ் (AR Murugadoss) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் இந்த படமானது அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகியிருக்கிறது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) இணைந்து நடித்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியின் ஏஸ் (Ace) படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது மதராஸி திரைப்படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் சமீபத்தில் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய நடிகை ருக்மிணி வசந்த், நடிகர் சிவகார்த்திகேயனை பற்றி பேசியிருக்கிறார். இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை ருக்மணியிடம் சிவகார்த்திகேயனை பற்றி ஒரே வரியில் கூறவேண்டும் என்றால் என்ன சொல்வீர்கள் ? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ருக்மிணி வசந்த், “சிவகார்த்திகேயன் மிகவும் அசாதாரமானவர்” என கூறியுள்ளார் இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : ஒன்னுமே இல்லாத போதும் என்ன நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க… மனைவி ஆர்த்தி குறித்து நெகிழ்ந்து பேசிய சிவகார்த்திகேயன்
ருக்மிணி வசந்த் பேசியது குறித்து மதராஸி படக்குழு வெளியிட்ட பதிவு :
The gorgeous @rukminitweets describes the team of #Madharaasi in one word and do not miss the ending 💥💥💥#Madharaasi grand release worldwide on September 5th.#DilMadharaasi#MadharaasiFromSep5 pic.twitter.com/3WlTJGlNOX
— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) August 31, 2025
இந்த பதிவில் நடிகை ருக்மிணி வசந்த், நடிகர் சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ், அனிருத் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். என பல்வேறு பிரபலங்கள் குறித்து பேசியிருந்தார். இந்நிலையில், இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : டிசம்பரில் வெளியாகிறது கார்த்தியின் வா வாத்தியார்… படக்குழு கொடுத்த அப்டேட்
நடிகை ருக்மிணி வசந்த் நடித்துவரும் படங்கள் :
நடிகை ருக்மிணி வசந்த் இந்த மதராஸி படத்தை தொடர்ந்து, கன்னட மொழியில் உருவாகியிருக்கும் காந்தாரா 2 படத்தில், ராணி கனகவதியாக நடித்துள்ளார். இவரின் கதாபாத்திரம் அறிமுக போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வந்தது. மேலும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் புதிய படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
மேலும் தமிழில் இவர் நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் பிரேம் குமாரின் கூட்டணியில் உருவாகும் சியான்64 படத்திலும் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடிகை ருக்மிணி வசந்த், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.