Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sivakarthikeyan : மதராஸி படத்துக்காக சிவகார்த்திகேயன் பெற்ற சம்பளம் இவ்வளவா?

Sivakarthikeyan Salary In Madharaasi Movie : தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் அதிரடி நாயகனாக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரின் முன்னணி நடிப்பில் மதராஸி திரைப்படமானது வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. இந்த படத்திற்காக அவர் பெற்ற சம்பளம் எவ்வளவு என்பதை பற்ற விவரமாக பார்க்கலாம்.

Sivakarthikeyan : மதராஸி படத்துக்காக சிவகார்த்திகேயன் பெற்ற சம்பளம் இவ்வளவா?
சிவகார்த்திகேயன் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 30 Aug 2025 22:56 PM

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR Murugadoss) இயக்கத்தில் தமிழில் சுமார் 5 ஆண்டுகளுக்கு பின் தயாராகியிருக்கும் படம் மதராஸி (Mdharaasi). இந்த படத்தில் முன்னணி ஹீரோவாக சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடித்திருக்கிறார். இந்த படத்தின் அறிவிப்புகளானது கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் எழுத்தில் வெளியான மான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்த நிலையில், தற்போது அவரின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் மதராஸி படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த மதராஸி படமானது அதிரடி ஆக்ஷன் கதைக்களத்துடன் மிக பிரம்மாண்டமாக தயாராகியிருக்கிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்துள்ளார்.மேலும் வில்லனாக துப்பாக்கி படத்தில் நடித்த வித்யுத் ஜாம்வால் நடித்துள்ளார்.

இந்த மதராஸி படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் பெற்ற சம்பள விவரம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் சுமார் ரூ 30 கோடிகளை சம்பளமாக பெற்றிருக்கிறார். இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க :  இன்னும் 10 – 15 நாட்களில் சிலம்பரசன் பட அப்டேட் வரும்.. வெற்றிமாறன் தகவல்!

சிவகார்த்திகேயனின் சம்பளம் உயர்வு

நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் மற்றும் மதராஸி போன்ற திரைப்படங்களில் நடிப்பதற்கு சுமார் ரூ 30 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது நடித்த வரும் பராசக்தி மற்றும் புதிதாக உருவாகவுள்ள  படங்களுக்கு எல்லாம் சுமார் ரூ 35 கோடிகளுக்கு மேல் சம்பளமாக கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.  அமரன் படத்தின் வெற்றியை அடுத்து தனது சம்பளத்தை சிவகார்த்திகேயன் அதிகரித்து வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : இனிமேல் அப்படி நடிக்கமாட்டேன்.. நடிகர் விஷால் சொன்ன விஷயம்!

மதராஸி படத்திற்கு சென்சார் குழு கொடுத்த சான்றிதழ்

மதராஸி திரைப்படமானது காதல், அதிரடி சண்டைகள் என மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாம். பொதுவாக சிவகார்த்திகேயனின் படங்களுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அந்த விதத்தில் இந்த மதராஸி படமானது அதிரடி ஆக்ஷன்  என பிரம்மபிண்ட படமாக அமைந்துள்ளது.

சென்சார் குழு இப்படத்திற்கு “யு/ஏ” தர சான்றிதழை வழங்கியுள்ளது. மேலும் இப்படத்தின் ரன்னிங் டைமாக 2 மணி நேரம் 45 நிமிடங்கள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.