Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Gatta Kusthi 2: மீண்டும் தொடங்கிய போட்டி.. ‘கட்டா குஸ்தி பார்ட் 2’ ஷூட்டிங் பூஜையுடன் தொடக்கம்!

Gatta Kusthi 2 Shooting Pooja : தமிழ் சினிமாவில் தற்போது அடுத்தடுத்த பார்ட் 2 படங்களானது உருவாகிவருகிறது. அந்த வகையில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமின் நடிப்பில் உருவாகும் படம் கட்டா குஸ்தி பார்ட் 2. இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் இன்று 2025 செப்டம்பர் 2ம் தேதியில் தொடங்கியுள்ளது.

Gatta Kusthi 2: மீண்டும் தொடங்கிய போட்டி.. ‘கட்டா குஸ்தி பார்ட் 2’  ஷூட்டிங் பூஜையுடன் தொடக்கம்!
கட்டா குஸ்தி 2Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 02 Sep 2025 19:25 PM

நடிகர் விஷ்ணு விஷாலின் (Vishnu Vishal ) நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி (Oho Enthan Baby). இந்த படத்தை இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடிக்க, அவரின் சகோதரன் ருத்ரா (Rudra) கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படமானது விஷ்ணு விஷாலின் தயாரிப்பின் கீழ் உருவாகியிருந்தது. இந்த படைத்ததை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் நடிகர் விஷ்ணு விஷால் ஒப்பந்தமாகிவருகிறார். அந்த வகையில் வேல்ஸ் பிலிம்ஸ் (Vels Films) நிறுவனத்தின் தயாரிப்பில் இவர் நடிக்கவிருக்கும் படம்தான் கட்டா குஸ்தி பார்ட் 2 (Gatta Kusthi 2). இந்த படமானது கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான கட்டா குஸ்தி படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாக்வுள்ளதாம்.

இந்த படத்தையும் இயக்குநர் செல்ல அய்யாவு (Chella Ayyavu) இயக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்புகள் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் இன்று 2025, செப்டம்பர் 2ம் தேதி தொடங்கியிருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : ரிலீசிற்கு தயாராகும் மதராஸி.. ரசிகர்களை கவரும் ‘தங்கப்பூவே’ லிரிக்கல் பாடல்!

கட்டா குஸ்தி பார்ட் 2 படத்தின் ஷூட்டிங் பூஜை புகைப்படங்கள் :

இந்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்திலும் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமிதான் நடிக்கவுள்ளார். இவர்கள் இருவரின் கூட்டணி இப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பார்ட் 2 படத்தில் நடிகர்கள் முனீஷ்காந்த், கருணாஸ், காளி வெங்கட் மற்றும் பார்ட் 1 படத்தில் நடித்த நடிகர்களும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இதையும் படிங்க : கோலிவுட் சினிமாவில் வரிசைக்கட்டும் பார்ட் 2 படங்களின் லிஸ்ட் இதோ!

இந்த படத்தை வேல்ஸ் நிறுவனத்துடன், விஷ்ணு விஷால் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளது. மேலும் இந்த பார்ட் 2 படத்திற்கு இசையமைப்பாளர் ஷான ரோல்டன் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டா குஸ்தி பார்ட் 1 பட வெற்றி :

தமிழில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி. இந்த படமானது குஸ்தி, காதல், மற்றும் திருமண வாழ்க்கை என மாறுபட்ட கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இதில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து இந்த கட்டா குஸ்தி பார்ட் 2 படமானது உருவாகவுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியிருக்கும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.