விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
Shakthi Thirumagan Movie: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருப்பவர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து படங்களில் நாயகனாக நடித்துவரும் இவரது அடுத்தப் படம் சக்தி திருமகன். இந்தப் படத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான சுக்ரன் படத்தில் இருந்து இசையமைப்பாளராக கொடிகட்டிப் பறப்பவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன விஜய் ஆண்டனி தற்போது நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக வலம் வருகிறார். இறுதியாக நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் மார்கன். சைக்கோ த்ரில்லர் கதையை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் புரமோஷன் பணிகளில் விஜய் ஆண்டனி படத்தில் இருக்கும் கெட்டப்பில் காட்சி அளித்தது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கடு. இசையமைப்பாளராக தொடர்ந்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வந்த விஜய் ஆண்டனி தற்போது நாயகனாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன ரோலில் நடித்த விஜய் ஆண்டனி கடந்த 2012-ம் ஆண்டு வெளியான நான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து சுமார் 13 ஆண்டுகளாக பலப் படங்களில் தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார். இவர் இசையமைக்கும் படங்களுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு இருப்பது போல இவர் நடிக்கும் படங்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைப்பது வழக்கமாக உள்ளது.
நாளை வெளியாகிறது சக்தி திருமகன் படத்தின் ட்ரெய்லர்:
இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி அடுத்ததாக நாயகனாக நடித்துள்ள படம் சக்தி திருமகன். இந்தப் படத்தை இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தை விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தான் தயாரித்துள்ளாது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடிகர்கள் வாகை சந்திரசேகர், சுனில் கிருபாலானி ஆகியோர் நடித்துள்ளனர். படம் வருகின்ற 19-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் நாளை 08-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
Also Read… லோகா படம் உங்களுக்கு புடிச்சு இருக்கா? அப்போ மலையாளத்தில் மின்னல் முரளி படத்தை மிஸ் பண்ணிடாதீங்க
சக்தி திருமகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#ShakthiThirumagan🔥 trailer drops SEPT 8th @ 5:00 PM!
An @ArunPrabu_‘s neo-political storm rises🌪️ #VA25#ShakthiThirumaganFromSept19#Bhadrakaali #VijayAntony25 #VijayAntony@vijayantony @TruptiRavi58094 #SunilKirpalani @vijayantonyfilm @ProRekha @vattalstudios pic.twitter.com/ZOr65QHFag
— VijayAntonyFilmCorporation (@vijayantonyfilm) September 6, 2025
Also Read… லோகா மலையாள சினிமாவில் எங்களுக்கு பெரிய பட்ஜெட் படம் – நடிகர் துல்கர் சல்மான்