இயக்குநர் பாலாவிற்கு நன்றி சொல்ல வேண்டும் – ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன விசயம்
Director AR Murugadoss: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள படம் மதராஸி. இன்று திரையரங்குகளில் வெளியான மதராஸி படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அளித்தப் பேட்டி ஒன்றி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரது இயக்கத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் இன்று படம் வெளியாகியுள்ளது. இறுதியாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் கடந்த 2020-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தர்பார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து தமிழில் இவரது இயக்கத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இடையில் இந்தியில் நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளியான சிக்கர்ந்தர் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படம் இன்று 5-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ளார். நடிகை ருக்மினி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். படம் கடந்த ஒன்னறை ஆண்டுகளாக நடைப்பெற்று வந்த நிலையில் இறுதியாக தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் படம் ஆக்ஷன் ரொமான்ஸ் என சிறப்பாக உள்ளதாக தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலகி வருகின்றது.




தமிழ் சினிமாவிற்கு பாலா கொடுத்த இரண்டும் ஆக்ஷன் நாயகன்கள்:
அதன்படி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்ஷன் படங்கள் என்றால் அஜித் அல்லது விஜய் ஆகியோர் மட்டுமே இருந்தபோது அவர்கள் அதற்கு ஒத்துகொள்ளவில்லை என்றால் படமே பண்ணமுடியாமல் போகும்.
ஆனால் இயக்குநர் பாலா சூர்யா மற்றும் விக்ரம் இருவரையும் ஆக்ஷன் ஹீரோக்களாக தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார். இதன் காரணமாக அஜித் விஜய் இல்லை என்றாலும் விக்ரம் சூர்யா தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு அற்புதம். இதற்காக பாலாவிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
Also Read… இந்தியாவில் இதை ஊக்குவிப்பது முக்கியம்.. மோட்டார் ஸ்போர்ட்ஸ் குறித்து அஜித் குமார் பேச்சு!
இணையத்தில் கவனம் பெறும் ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி:
” I must thank director Bala sir, Bcz at that time – instead of Ajith or Vijay, He gave us @Suriya_offl sir as an action hero, Which lifted the industry to greater heights. So, for me directing Ghajini with Suriya sir, I should indirectly thank him. “
– @ARMurugadoss 🔥🔥📈🥵 pic.twitter.com/jeIjoyF1SI
— s (@sridhar_Offl) September 3, 2025
Also Read… இன்ஸ்டாவில் கூலி படத்தின் BTS புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்