Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எஸ்.ஏ.சந்திரசேகர் – ஷோபா கட்டிய புதிய வீட்டின் கிரகப்பிரவேசம்.. தளபதி விஜய் வரவில்லையா?

SA Chandrasekhar New House : தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90கள் காலகட்டத்தில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவர் தளபதி விஜய்யின் தந்தையும் ஆவார். எஸ்.ஏ. சந்திர சேகர் மற்றும் ஷோபா இருவரும் புதிய வீடு கட்டியுள்ளனர்.

எஸ்.ஏ.சந்திரசேகர் – ஷோபா கட்டிய புதிய வீட்டின் கிரகப்பிரவேசம்.. தளபதி விஜய் வரவில்லையா?
எஸ்.ஏ. சந்திரசேகர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 02 Sep 2025 18:19 PM

தென்னிந்திய சினிமாவில் 80 மற்றும் 90கள் காலகட்டத்தில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர் (S. A. Chandrasekhar). இவர் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் அவரின் மனைவி ஷோபா (Shobha) இருவரும் , விஜய்யுடனான கருத்துவேறுபாட்டின் காரணமாக,  தனியாக வசித்து வருகிறார்கள் என கூறப்பட்டது. ஆனாலும் விஜய்யின் திரைப்பட மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள் (Political program) போன்றவற்றில் தற்போது இவர்கள் இருவரும் கலந்துகொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா இருவரும் புதிய வீடு (New Home) கட்டியுள்ளனர். இந்த புது இல்லத்தின் கிரஹப்பிரவேசம் நிகழ்வானது இன்று 2025 செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் தற்போது எஸ்.ஏ. சந்திரசேகர் கட்டியிருக்கும் புதிய இல்லம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : மருமகனை ஹீரோவாக்கிய விஜய் ஆண்டனி… வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

எஸ்.ஏ. சந்திரசேகர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு :

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், கடந்த 1978 ஆண்டு வெளியான அவள் ஒரு பச்சை குழந்தை என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகினார். இதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்ககளையும் இயக்கத் தொடங்கியிருந்தார். இவர் கேப்டன் விஜயகாந்த் முதல் தளபதி விஜய் வரை பல பிரபலங்களை வைத்து படங்களை இயக்கியிருக்கிறார்.

இதையும் படிங்க : 9 வருடத்தில் 6 படங்கள்.. நான் பெருமையாக சொல்வேன்- லோகேஷ் கனகராஜ்!

இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமால் தயாரிப்பது மற்றும் படங்களில் நடிப்பது போன்ற பணிகளையும் செய்து வந்தார். தற்போது வயது மூப்பின் காரணமாக சினிமாவில் இருந்து விளக்கியிருக்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பல கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட வீட்டை கட்டியிருக்கும் நிலையில், இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா கட்டியிருக்கும் இந்த புதிய இல்லத்தில், புதுமனை புகுவிழா இன்று 2025, செப்டம்பர் 2ம் தேதியில் நடைபெற்றிந்தது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டனர். ஆனால் தளபதி விஜய் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியலில் பிஸியாக இருப்பதால் தனது அப்பா, அம்மாவின் வீட்டு கிரஹப்பிரவேச நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை என்றும் விரைவில் அவர் புதுவீட்டில் தனது பெற்றோரை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.