வசூலில் பட்டையை கிளப்பும் லோகா படம்… இதுவரை வசூலித்தது எவ்வளவு?
Lokah Chapter 1: Chandra: மலையாள சினிமாவில் இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். அந்த வரிசையில் தற்போது சூப்பர் ஹீரோ படம் ஒன்றை வெளியிட்டு ஒட்டுமொத்த இந்தியா மட்டும் இன்றி உலக அளவில் மலையாள சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர்.

மலையாள சினிமாவில் இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. சிறிய பட்ஜெட்டில் உருவாகி மலையாள சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் தொடர்ந்து ஹிட்டை கொடுத்து வருகிறது மலையாள சினிமா. அந்த வரிசையில் தற்போது லோகா சாப்டர் 1 சந்திரா (Lokah Chapter 1: Chandra) படமும் இணைந்துள்ளது. நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேஃபரர் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லேன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, நிஷாந்த் சாகர், சந்து சலிம்குமார், அருண் குரியன், ரகுநாத் பலேரி, விஜயராகவன், அன்னா பென், நித்யஸ்ரீ, சன்னி வேயன், டொவினோ தாமஸ், சிவாஜித் பத்மனாபன், துல்கர் சல்மான் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து வெளியாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் டாம்னிக் அருண் இயக்கியுள்ள நிலையில் படத்தின் திரைக்கதையை சந்தியா பாலசந்திரன் எழுதியுள்ளார். இந்தப் படம் கடந்த 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.




இந்த வார இறுதிக்குள் ரூபாய் 150 கோடி வாசூலை எட்டும் லோகா படம்?
மலையாள சினிமாவில் ரூபாய் 30 கோடி பட்ஜெட்டில் உருவான லோகா சாப்டர் 1 சந்திரா படம் உலக அளவில் வசூலில் சாதனைப் படத்து வருகின்றது. அதன்படி படம் இதுவரை 133-45 கோடிகள் ரூபாய் வசூலித்துள்ளதாகவும் இந்த வார இறுதிக்குள் படம் 150 கோடி வசூல் கிளப்பில் இடம் பிடிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு படம் 100 கோடி ரூபாய் வசூலித்ததை படக்குழு தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது படம் 150 கோடி ரூபாய் வசூலை எட்ட உள்ளது என்ற தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோகா படக்குழு வெளியிட்ட சமீபத்திய எக்ஸ் தள பதிவு:
Kerala’s Lokah fever still burning bright! 🌟 Just added 365+ new late-night shows 🚨 Who’s in for a midnight movie night? Let us know! #LokahMovie#Lokah #TheyLiveAmongUs@DQsWayfarerFilm @dulQuer @dominicarun@NimishRavi@kalyanipriyan@naslen__ @JxBe @chamanchakko… pic.twitter.com/wgOvazL5aL
— Wayfarer Films (@DQsWayfarerFilm) September 6, 2025