Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தை திரையரங்கில் பார்த்த ஷாலினி அஜித்… வைரலாகும் போட்டோஸ்

Shalini Ajithkumar : இன்று நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ரசிகர்கள் உட்பட பிரபலங்கள் பலர் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ஷாலினி அஜித்தும் மதராஸி படத்தை திரையரங்குகளில் சென்று பார்த்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தை திரையரங்கில் பார்த்த ஷாலினி அஜித்… வைரலாகும் போட்டோஸ்
ஷாலினி அஜித்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Sep 2025 15:09 PM IST

நடிகை ஷாலினி அஜித்குமார் (Shalini Ajithkumar)தனது திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார். இந்த நிலையில் அவ்வபோது பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதும், திரையரங்குகளில் படங்களைப் பார்க்க வரும்போது ரசிகர்களின் கண்களுக்கு காட்சியளிக்கிறார் நடிகை ஷாலினி அஜித்குமார். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் நடிகை ஷாலினி அஜித்குமார் தனது கணக்கை தொடங்கினார். இதற்கு மில்லியன் கணக்கில் ஃபாலோவர்ஸ்கள் உள்ளனர். மேலும் நடிகர் அஜித் குமாருக்கு எந்தவித சமூக வலைதளப் பக்கத்திலும் இல்லாத காரணத்தால் நடிகை ஷாலினி அஜித் குமாரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போடப்படும் எக்ஸ்குளூசிவ் புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாகவே நடிகை ஷாலினி அஜித்குமாரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ரசிகர்கள் தொடர்ந்து ஃபாலோ செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று நடிகை ஷாலினி அஜித்குமாரின் புகைப்படங்கள் எக்ஸ் தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது. அதில் நடிகை ஷாலினி அஜித்குமார் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் இன்று செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியான மதராஸி படத்தைப் பார்க்க திரையரங்கிற்கு வந்துள்ளார்.

மதராஸி படத்திற்கு நடிகை ஷாலினி அஜித்குமார் குடுத்த விமர்சனம்:

இவர் திரையரங்குகளில் வரும் புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் வெளியிட்டு வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் படத்தை பார்த்து முடித்துவிட்டு வெளியே வந்த நடிகை ஷாலினி அஜித்குமாரிடம் படம் எப்படி இருக்கிறது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த நடிகை ஷாலினி அஜித்குமார் படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நன்றாக இருக்கிறது என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இது தொடர்பான வீடியோ இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகின்றது.

Also Read… அனஸ்வராவின் அந்தப் படத்தப் பார்த்ததில் இருந்து நான் இயக்கும் படத்தில் அவரைதான் நாயகியாக்க வேண்டும் என்று நினைத்தேன் – இயக்குநர் சொன்ன விசயம்!

இணையத்தில் நடிகை ஷாலினி அஜித் குமாரின் வீடியோ:

Also Read… கோலிவுட் சினிமாவில் வரிசைக்கட்டும் பார்ட் 2 படங்களின் லிஸ்ட் இதோ!