Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கவின் பட இயக்குநருடன் இணையும் விக்ரம்? வைரலாகும் தகவல் இதோ!

Vikram New Movie Update : நடிகர் சியான் விக்ரமின் நடிப்பில் தமிழில் பல படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்த நிலையில், தற்போது இவர் கவினின் ஹாய் பட இயக்குநரின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வைரலாகி வருகிறது.

கவின் பட இயக்குநருடன் இணையும் விக்ரம்? வைரலாகும் தகவல் இதோ!
விக்ரம் மற்றும் விஷ்ணு இடவன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 02 Sep 2025 22:37 PM

கோலிவுட் சினிமாவில் பல மாறுபட்ட கதைக்களங்களில் நடித்து, ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் சியான் விக்ரம் (Chiyaan Vikram). இவர் தமிழில் இயக்குநர் ஷங்கர் (Shankar) முதல் மணிரத்னம் (Mani Ratnam) வரை பிரம்மாண்ட இயக்குநர்களுடன் படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் வீர தீர சூரன் 2 (Veera Dheera Sooran 2). இந்த படத்தை பிரபல இயக்குநரான எஸ்.யு. அருண் குமார் (SU. Arun kumar) இயக்கியிருந்தார். இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதியில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடித்திருந்தார். மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து நடிகர் விக்ரம் சியான்63 (Chiyaan63) மற்றும் சியான்64 (Chiyaan64) என அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படங்களை தொடர்ந்து மேலும் புதிய படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் கவின் (kavin) மற்றும் நயன்தாராவின் (Nayanthara) ஹாய் (Hi) படத்தை இயக்கும் விஷ்ணு இடவன் (Vishnu Edavan ) இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும், சியான் விக்ரமிற்கு இவர் சொன்ன கதை மிகவும் பிடித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இது விக்ரமின் 65வது படமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த தகவல் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கூலி படத்தின் சிக்கிடு பாடலின் BTS வீடியோவை வெளியிட்ட படக்குழு!

இயக்குநர் விஷ்ணு இடவனின் எக்ஸ் பதிவு :

சியான் விக்ரமின் புதிய திரைப்படங்கள் :

வீர தீர சூரன் திரைப்படத்தை தொடர்ந்த நடிகர் விக்ரம், இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் புதிய படத்தில் இணைவதாக அறிவித்திருந்தார். இயக்குநர் மடோன் அஷ்வின் ஏற்கனவே மண்டேலா மற்றும் மாவீரன் போன்ற படங்களை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சியான்63 படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ளது.

இதையும் படிங்க :  சிம்பு – வெற்றிமாறன் படத்தில் நடிக்கிறீர்களா? நகைச்சுவையாக பதிலளித்த நெல்சன் திலீப்குமார்!

இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025, அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை அடுத்ததாக 96 பட புகழ் பிரேம் குமார் இயக்கத்தில் சியான்64 படத்தில் விக்ரம் இணைந்துள்ளார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டெநேஷ்னல் நிறுவனமானது தயாரிக்கவுள்ளது.

இந்த படத்தின் தொடர்பான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த படமானது அதிரடி திரில்லர் கதைக்களத்துடனான படமாக உருவாக்கவுள்ளதாம். தற்போது இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இந்த 2025ம் ஆண்டு இறுதியில் இந்த படத்தில் நடிகர் விக்ரம் இணைவார் என்று கூறப்படுகிறது.