Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ghatti : அனுஷ்காவின் காட்டி திரைப்படம் எப்படி இருக்கு? எக்ஸ் விமர்சனங்கள் இதோ!

Ghatti Movie X Review : அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் அதிரடி ஆக்ஷன் படமாக வெளியாகியிருக்கும் படம் தான் காட்டி. தெலுங்கு, தமிழ், என 2025 செப்டம்பர் 5 ஆம் தேதியில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் எக்ஸ் விமர்சனங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.

Ghatti : அனுஷ்காவின் காட்டி திரைப்படம் எப்படி இருக்கு? எக்ஸ் விமர்சனங்கள் இதோ!
அனுஷ்காவின் காட்டி திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 05 Sep 2025 14:56 PM IST

நடிகை அனுஷ்கா ஷெட்டியின் (Anushka Shetty) அதிரடி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் காட்டி (Ghatti). இந்த படத்தில் அனுஷ்கா ஆக்ஷன் நாயகியாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ளார். இந்த படமானது தெலுங்கு மொழியை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் நிலையில், இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு (Vikram Prabhu) தெலுங்கிலும் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த காட்டி படத்தை இயக்குநர் க்ரிஷ் ஜாகர்லமுடி (Krish Jagarlamudi) இயக்க, யுவி க்ரியேஷன் நிறுவனமானது இணைந்து தயாரித்துள்ளது. இந்த படமானது முற்றிலும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான கதைக்களத்தில் உருவாகியிருக்கிறது.  இந்தப் படம் 2025 செப்டம்பர் 5 ஆம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.

இதில் அனுஷ்கா ஒரு பழங்குடியினப் பெண்ணாக நடித்துள்ளார். இதுவரை வெளியிடப்பட்ட முதல் பார்வை, காட்சிகள், டீசர் மற்றும் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பெரிதும் அதிகரித்திருந்தது.

இதையும் படிங்க : நான் இயக்கிய படங்களில் எனக்கு பிடித்த பெண் கதாப்பாத்திரம் இதுதான் – இயக்குநர் வெற்றிமாறன்

நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு முழுமையான அதிரடி கதைக்களம் கொண்ட படத்தில் அனுஷ்கா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று 2025 செப்டம்பர் வெளியான காட்டி படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் ட்விட்டரில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த காட்டி படமானது எப்படி இருக்கிறது என்பதை பற்றி முழுமையாக பார்ப்போம்.

காட்டி படத்தின் கதைக்களம் குறித்த எக்ஸ் பதிவு

காட்டி படத்தில் முதல் பாதியை விடவும், இரண்டாம் பாதியில் அனுஷ்கா ஷெட்டியின் கதாபாத்திரத்தின் நோக்கமும் , அதிரடி ஆக்ஷனும் தாறுமாறாக உள்ளதாம். மேலும் இப்படத்தின் பின்னணி இசையும் இப்படத்திற்கு பலம் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : மதராஸி படம் எப்படி இருக்கு? – ரசிகர்களின் விமர்சனம் இதோ!

காட்டி திரைப்படத்தின் விமர்சன பதிவு :

அனுஷ்கா ஷெட்டி மற்றும் விக்ரம் பிரபுவின் கூட்டணி இப்படத்தில் நன்றாக இருப்பதாகவும், இந்த படத்தில் முதல் பாதியை ஒப்பிடும்போது இரண்டாம் பாதி திரைப்படத்தில் அனுஷ்காவின் நடிப்பு அருமையாக இருக்கிறதாம்.

காட்டி படத்தினை பற்றிய எக்ஸ் விமர்சனம்

மொத்தத்தில் அனுஷ்கா ஷெட்டி மற்றும் விக்ரம் பிரபுவின் கூட்டணியில் வெளியான இந்த காட்டி படமானது திரையரங்குகளில் ஆக்ஷன் படங்களை ரசிக்கும் ரசிகர்களுக்கு ஏற்ற திரைப்படம் என விமர்சனங்கள் வந்துள்ளன. நிச்சயமாக குடும்பத்துடன் திரையரங்குகளில் பார்க்கும் படமாக இந்த காட்டி படம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.