Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Madharaasi Reviews: மதராஸி படம் எப்படி இருக்கு? – ரசிகர்களின் விமர்சனம் இதோ!

Madharaasi X Review: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள 'மதராஸி' படத்தின் முதல் நாள் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படம், சிவகார்த்திகேயனின் நடிப்பைப் பாராட்டினாலும், இரண்டாம் பாதியின் வேகம் குறைவாக இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Madharaasi Reviews: மதராஸி படம் எப்படி இருக்கு? – ரசிகர்களின் விமர்சனம் இதோ!
மதராஸி படம்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 05 Sep 2025 12:40 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி படம் இன்று (செப்டம்பர் 5) வெளியாகியுள்ள நிலையில் முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் அமரன் படத்திற்கு பிறகு மதராஸி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இவர் கடைசியாக 2020 ஆம் ஆண்டு தர்பார் படத்தை ரஜினியை வைத்து இயக்கியிருந்தார். அதன்பிறகு 5 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் எந்த படமும் இயக்காமல் இருந்தார். மீண்டும் அவர் மதராஸி மூலம் தமிழ் சினிமாவுக்கு திரும்பியுள்ளார். இப்படியான நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மதராஸி படத்தின் ஹீரோயினாக ருக்மணி வசந்த் நடிக்க வித்யூத் ஜம்வால்,  பிஜூ மேனன், விக்ராந்த், ஷபீர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

இப்படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என சிவகார்த்திகேயனும், ஏ.ஆர். முருகதாஸூம் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். மேலும் குழந்தைகளுக்காக ஆக்‌ஷன் காட்சிகள் குறைக்கப்பட்டு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையில் பாடல்கள் ஹிட்டான நிலையில், ட்ரெய்லரும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு தவிர்த்து பிற மாநிலங்களில் அதிகாலை முதல் காட்சி திரையிடப்பட்டது. அதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றைக் காணலாம்.

Also Read: அப்படிலாம் ரசிகர்கள பிடிச்சுட முடியாது – நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

மதராஸி படம் எப்படி இருக்கு?

ஏ.ஆர்.முருகதாஸின் மெனக்கெடல்

மதராஸி படத்தின் ஏ.ஆர்.முருகதாஸ் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என மெனக்கெட்டிருப்பது தெருகிறது. ஆனால் திரைக்கதையில் ஏற்பட்டுள்ள சறுக்கல், ஓவரான பில்ட் அப் காட்சிகள் படத்திற்கு மைனஸாக அமைந்துள்ளதாக இணையவாசி ஒருவர் கூறியுள்ளார்.

ஒற்றை ஆளாக தாங்கும் சிவகார்த்திகேயன்

ஒரு நம்பிக்கைக்குரிய ஆக்‌ஷன் த்ரில்லராகத் தொடங்கும் படம் மெதுவாக பாதையில் இருந்து நழுவினாலும் சிவகார்த்திகேயன் படத்தை தாங்கி நிற்கிறார். காதல், பாடல் ஆகியவை தடைகளாக அமைந்திருக்கிறது. புரண்டு, இரண்டாம் பாதியில், படம் முற்றிலும் வேகத்தை இழக்கிறது.

ஆக்‌ஷன் த்ரில்லர் படம்

ஒரு நம்பிக்கைக்குரிய ஆக்‌ஷன் த்ரில்லராக தொடங்கும் படம், இரண்டாம் பாதியில் சுவாரஸ்யத்தை இழக்கிறது.சுவாரஸ்யமாக ஒருமுறை பார்க்கலாம்.

தியேட்டரில் பார்க்கலாம் 

சிவகார்த்திகேயன் நடிப்பில் அருமையாக படம் வந்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸின் திரைக்கதை, அனிருத்தின் இசை ஆகியவை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது என மற்றொரு இணையவாசி கூறியுள்ளார்.