Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rajinikanth Coolie Movie : ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. ரஜினிகாந்தின் கூலி பட ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது!

Coolie Movie OTT Date : கோலிவுட் சினிமாவின் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான திரைப்படம் கூலி. இந்த படமானது கடந்த, 2025 ஆகஸ்ட் 14 ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அமேசான் ப்ரைம் அறிவித்துள்ளது.

Rajinikanth Coolie Movie : ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. ரஜினிகாந்தின் கூலி பட ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது!
ரஜினிகாந்தின் கூலி திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 04 Sep 2025 15:43 PM IST

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) சினிமாவில் சுமார் 50 ஆண்டு பயணத்தை நிறைவு செய்துள்ளார். இவரின் 50 வருட சினிமா பயணத்தின் ஸ்பெஷலாக இந்த 2025ம் ஆண்டில் கூலி (Coolie) திரைப்படமானது மிக பிரம்மாண்டமாக வெளியாகியிருந்தது. இந்த படத்தில் ரஜினிகாந்த்துடன் ஆமிர்கான் (Aamir Khan), நாகார்ஜுனா (Nagarjuna), உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan) , சத்யராஜ் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியிருந்தது. ரஜினிகாந்த்தின் இந்த படத்திற்கு அனிருத் (Anirudh) இசையமைக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்திருந்தது.

இந்த படமானது முற்றிலும் கேங்ஸ்டர்ஸ் மற்றும் எமோஷனல் கதைக்களத்துடன் வெளியாகியிருந்த நிலையில், மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. திரையரங்குகளில் வெளியாகி இப்படமானது 4 வாரங்களை தொட்ட நிலையில், தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : சினிமாவில் விஜய் என் தம்பி.. இப்போது அப்படி இல்லை.. இயக்குநர் மிஷ்கின் ஓபன் டாக்!

இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடியில் வெளியாகவுள்ளதாம். இது குறித்த அறிவிப்பை அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனமானது வெளியிட்டுள்ளது.

அமேசான் ப்ரோம் ஓடிடி நிறுவனம் வெளியிட்ட கூலி படம் பற்றிய அறிவிப்பு

கூலி படத்தின் ஓடிடி ரிலீஸ் :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி படமானது 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியாகும் என, படத்தின் வெளியீட்டிற்கு முன் படக்குழு கூறியிருந்தது. இந்த கூலி படமானது வெளியான முதல் நாளில் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படமானது சுமார் ரூ 355 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படமானது மொத்தம் சுமார் ரூ 505 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : லோகா படம் உங்களுக்கு புடிச்சு இருக்கா? அப்போ மலையாளத்தில் மின்னல் முரளி படத்தை மிஸ் பண்ணிடாதீங்க

இந்நிலையில், 8 வாரங்களுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4 வாரங்களில் கூலி படமானது ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்  ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

கூலியில் நடிப்பதற்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்

இந்த கூலி படமானது ரஜினிகாந்தின் 171வது படமாக வெளியாகியிருக்கிறது. மேலும் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் முதன் முறையாக வெளியான படம். இந்த படத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழி பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படத்தில் நடிப்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சுமார் ரூ 150 வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் வரவேற்புக்கு பின் சுமார் ரூ 50 கோடிகளை கொடுக்கப்பட்டிருந்ததாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.