Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Mysskin: சினிமாவில் விஜய் என் தம்பி.. இப்போது அப்படி இல்லை.. இயக்குநர் மிஷ்கின் ஓபன் டாக்!

Mysskin About Thalapthy Vijay : தமிழ் பிரபல இயக்குநர் மற்றும் நடிகராக இருந் வருபவர் மிஷ்கின். இவர் படங்களை இயக்கி மற்றும் மற்ற படங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மிஷ்கின், தளபதி விஜயுடனான தம்பி உறவானது வேறு ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Mysskin: சினிமாவில் விஜய் என் தம்பி.. இப்போது அப்படி இல்லை.. இயக்குநர் மிஷ்கின் ஓபன் டாக்!
மிஷ்கின் மற்றும் தளபதி விஜய்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 04 Sep 2025 14:10 PM IST

இயக்குநர் மிஷ்கினின் (Mysskin) இயக்கத்தில் தமிழில் கிட்டத்தட்ட பல படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை கொடுத்திருக்கிறது. இவரின் இயக்கத்தில் வெளியான படங்களில் ஆழ்ந்த கருத்துக்கள் மற்றும் மற்ற இயக்குநர்களின் படங்களில் இருந்து சற்று மாறுபட்ட கதையாக இருக்கும். மேலும் இவரின் மேடை பேச்சுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கும். அவர் சினிமா நிகழ்ச்சி மேடைகளில் எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகவே பேசிவிடுவார் என்றே கூறலாம். இவரின் இயக்கத்தில் தமிழில் ட்ரெயின் (Train) மற்றும் பிசாசு 2 (Pisasu 2) போன்ற திரைப்படங்கள் வெளியாகி காத்திருக்கிறது. இந்த இரு படங்களும் சில பிரச்சனையின் காரணமாக இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. மேலும் இயக்குநர் மிஷ்கின் தளபதி விஜய் உடனும் (Thalapathy Vijay) படங்களில் நடித்துள்ளார்.

இறுதியாக அவர், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான லியோ (Leo) படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில் பல இடங்களில் தளபதி விஜய் தனது தம்பி என கூறிவந்த மிஷ்கின், சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஷயம் ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் மிஷ்கின் விஜயுடனான உறவு முறை மாறிவிட்டதாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க : ”தளபதி டிவி”.. புதிய தொலைக்காட்சியை தொடங்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.. பிளான் என்ன?

தளபதி விஜய் பற்றி பேசிய மிஷ்கின் :

செய்தியாளர்கள் சந்திப்பில் தளபதி விஜய் பற்றி பேசிய மிஷ்கின், “சினிமாவில் இருக்கும்வரை தளபதி விஜய் எனக்கு தம்பியாக இருந்தார். ஆனால தற்போது அவர் அரசியல் தலைவர் ஆகிவிட்டார். அதன் காரணமாக அவருடனான உறவுமுறை வேறாக மாறிவிட்டது. மேலும் அவரை பற்றிய அரசியல் கருத்துக்களை நான் பேச விரும்பவில்லை” என்று இயக்குநர் மிஷ்கின் பேசியுள்ளார்.

இதையும் படிங்க : மதராஸி படம்.. குழந்தைகளுக்காக பல காட்சிகள் மாற்றம்!

இந்த தகவலானது தற்போது தளபதி விஜயின் ரசிகர்கள் மத்தியில் கோபத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் எவ்வாறு இப்படி மிஷ்கின் பேசுவார் என்று விஜய் ரசிகர்கள் மிஷ்கினை விமர்சித்து வருகின்றனர்.

மிஷ்கின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் பூஜை பதிவு :

அறிமுக இயக்குநர் பிரவின் இயக்கத்தில், இயக்குநர் மிஷ்கின் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியுள்ளது. இப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரடெக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படமானது முழுக்க வழக்கு நீதிமன்றம் சார்ந்த கதைக்களத்துடன் உருவாகவுள்ளதாம். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியிருக்கும் நிலையில் வரும் 2026ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கீர்த்தி சுரேஷ் தமிழில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.