Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

”தளபதி டிவி”.. புதிய தொலைக்காட்சியை தொடங்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.. பிளான் என்ன?

TVK Leader Vijay: தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலை ஒட்டி, புதிய தொலைக்கட்சியை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சேனலுக்கு தளபதி டிவி என பெயர் சூட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

”தளபதி டிவி”.. புதிய தொலைக்காட்சியை தொடங்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.. பிளான் என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 03 Sep 2025 18:57 PM

சென்னை, செப்டம்பர் 3, 2025: தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் ஒரு புதிய சேனலை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தல் தான் அதன் இலக்கு எனவும் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய சூழ்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்காக கட்சி தரப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்சியின் முதல் மாநில மாநாடு 2024 ஆம் ஆண்டு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு 2025 ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெற்றது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. அதில், தமிழக வெற்றிக்கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்க உள்ளது. தமிழக வெற்றிக்கழகம் களத்திற்கு புதிதாக இருந்தாலும், அரசியல் நகர்வுகள் அனைத்தும் துல்லியமாக எடுத்து வைக்கப்படுகின்றன.

மேலும் படிக்க: திமுக பெண் கவுன்சிலர் காலில் விழுந்த ஊழியர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ.. நடந்தது என்ன?

தேர்தலை சந்திக்க அயத்தமாகும் தமிழக வெற்றி கழகம்:

மேலும், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டங்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. உறுப்பினர் சேர்க்கை போன்ற நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ‘மை டிவி கே’ என்ற ஆப் மூலம் உறுப்பினர் சேர்க்கை வலுப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், தமிழக வெற்றிக்கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக நிர்வாகிகள் அயராது உழைக்க வேண்டும் என தலைமை தரப்பில் கட்டளைகள் இடப்பட்டுள்ளன. இதற்கிடையில், வரும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பிரச்சார வாகனமும் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம்.. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடிதம்!

புதிதாக சேனலை தொடங்க திட்டம்:

இப்படிப்பட்ட சூழலில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் விரைவில் ஒரு தொலைக்காட்சியை தொடங்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் களத்தில் பலரும் தங்கள் கட்சியைச் சார்ந்த தொலைக்காட்சிகளை நடத்தி வருவது வழக்கம். அந்த வரிசையில், தற்போது தமிழக வெற்றிக்கழகமும் இணைகிறது.

புதிய தொலைக்காட்சி தொடங்க வேண்டுமெனில் அதற்கான உரிமம் பெற வேண்டும். அதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஏற்கனவே இயங்கி வரும் ஒரு தொலைக்காட்சியை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடத்தி வந்த கேப்டன் தொலைக்காட்சியை விஜய் வாங்க உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

‘கேப்டன் தொலைக்காட்சி’ வாங்க முடியவில்லை என்றால், தற்போது பராமரிப்பு இல்லாமல் இருக்கும் ஏதாவது ஒரு மியூசிக் சேனலை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தளபதி டிவி:

அப்படிப் புதியதாக ஒரு தொலைக்காட்சி வாங்கப்பட்டால், அந்த சேனலை ‘தளபதி டிவி’ என்ற பெயரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் பெயரால் ஏற்கனவே ஒரு தமிழ் தொலைக்காட்சி பிரபலமாக இயங்கிவரும் நிலையில், இந்த ‘தளபதி டிவி’ தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.இவ்வாறு சேனல் தொடங்குவதன் மூலம், கட்சி நிர்வாகிகளையும் கட்சி வேட்பாளர்களையும் மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்க முடியும் என்பதே இந்த முடிவின் நோக்கமாகும்.