லோகா சாப்டர் 1: சந்திரா படத்தின் மூத்தோன் இவர்தான்… படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!
Lokah Chapter 1 Chandra: மலையாள சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் லோகா சாப்டர் 1 சந்திரா. சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தில் மூத்தேன் என்ற கதாப்பாத்திரம் யார் என்பது குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மலையாள சினிமாவில் சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் லோகா சாப்டர் 1 சந்திரா (Lokah Chapter 1 Chandra). இந்தப் படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் நஸ்லேன், சந்து சலிம்குமார், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, அருண் குரியன், நிஷாந்த் சாகர், ரகுநாத் பலேரி, அன்னா பென், விஜயராகவன், நித்யஸ்ரீ உட்பட மலையாள சினிமாவில் பிரபல நடிகர்கள் பலர் கேமியோ ரோலில் நடித்து இருந்தனர். இயக்குநர் அருண் டாம்னிக் இயக்கி இருந்த இந்தப் படத்தை நடிகர் துல்கர் சல்மனின் வேஃபரர் ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. இந்தப் படத்திற்கு திரைக்கதையை சந்தியா பாலசந்திரன் எழுதி இருந்த நிலையில் படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.
மலையாளத்தில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்த வார இறுதிக்குள் ரூபாய் 150 கோடிகள் வரை வசூலிக்க வாய்ப்பு உள்ளது என்று சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இதுவரை ரூபாய் 133 கோடிகள் வரை வசூலித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
மூத்தோன் யார் என்பதை அறிவித்தது லோகா படக்குழு:
சூப்பர் ஹீரோவாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில் நடிகர்கள் டொவினோ தாமஸ் மற்றும் துல்கர் சல்மான் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். சாதாரண மனிதர்கள் போலவே இருக்கும் இவர்கள் மக்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் அவர்களுக்காக போராடுகிறார்கள்.
இந்த சூப்பர் ஹீரோ பவர் என்பது கல்யாணிக்கு மட்டும் இன்றி பலருக்கு இந்த உலகத்தில் இருப்பதாக தெரிவிக்கபடுகின்றது. அதில் இவர்கள் அனைவருக்கும் தலைவர் ஒருவர் இருக்கிறார் என்பது போல காட்டப்படுகின்றது. ஆனால் அவரது குரல் மட்டுமே ஒரு காட்சியில் கேட்கும். அவரின் முகம் காட்டப்படாது. அந்த ஒத்த வார்த்தையிலேயே மம்முட்டிதான் மூத்தோன் என்பது தெரியும். இந்த நிலையில் இன்று மம்முட்டி தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் படக்குழு ஹேப்பி பர்த்டே மூத்தோன் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் மம்முட்டிதான் மூத்தோன் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… காமெடிக்கு பஞ்சம் இல்லாத இந்த குருவாயூர் அம்பலனடையில் படத்தை பார்க்க தவறாதீர்கள்
லோகா சாப்டர் 1 சந்திரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Happy Birthday Moothon! We’re sending you endless love. Team #Lokah @mammukka ❤️#Lokah #TheyLiveAmongUs@DQsWayfarerFilm @dulQuer @dominicarun@NimishRavi@kalyanipriyan@naslen__ @JxBe @chamanchakko @iamSandy_Off @santhybee @AKunjamma pic.twitter.com/u0sy5w0dbe
— Wayfarer Films (@DQsWayfarerFilm) September 7, 2025
Also Read… நான் இயக்கிய படங்களில் எனக்கு பிடித்த பெண் கதாப்பாத்திரம் இதுதான் – இயக்குநர் வெற்றிமாறன்