காமெடிக்கு பஞ்சம் இல்லாத இந்த குருவாயூர் அம்பலனடையில் படத்தை பார்க்க தவறாதீர்கள்
Guruvayoor Ambalanadayil Movie : மலையாள சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான காமெடிப் படங்களில் மிகவும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தப் படம் குருவாயூர் அம்பலநடையில். இந்தப் படம் தற்போது எந்த ஓடிடியில் கணக் கிடைக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் எழுத்தாளர் தீபு பிரதீப் திரைக்கதையில் திரையரங்குகளில் வெளியான படம் குருவாயூர் அம்பலனடையில். நடிகர்கள் பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் பேசில் ஜோசஃப் முன்னணி வேடத்தில் நடித்த இந்தப் படம் கடந்த மே மாதம் 16-ம் தேதி 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. காமெடி ஜானரில் வெளியான இந்தப் படத்த்தில் நடிகர்கள் பிரித்விராஜ் மற்றும் பேசில் ஜோசஃப் உடன் இணைந்து நடிகர்கள் நிகிலா விமல், அனஸ்வர ராஜன், யோகி பாபு, சிஜு சன்னி, சாஃப், ஜெகதீஷ், பைஜு சந்தோஷ், பி.பி. குன்கிகிருஷ்ணன், கோட்டயம் ரமேஷ், இர்ஷாத், ரேகா, உஷா சந்திரபாபு, பிரியா ஸ்ரீஜித், குடச்சநாடு கனகம், ஜோமன் ஜோதிர், அகில் காவலியூர், அஸ்வின் விஜயன், நோவா நிஷின், அஜு வர்கீஸ், அரவிந்த் ஆகாஷ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
இந்தப் படத்தை பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் E4 என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர்கள் சுப்ரியா மேனன், முகேஷ் ஆர். மேத்தா, சி.வி.சாரதி ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து இருந்தனர். திரையரங்குகளில் வெளியனா இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
குருவாயூர் அம்பலநடையில் படத்தின் கதை என்ன?
வெளிநாட்டில் இருக்கும் பேசில் ஜோசஃபிற்கு கேரளாவில் உள்ள பிரித்விராஜின் தங்கை அனஸ்வராவை திருமண வரனாக பேசியிருப்பார்கள். காதல் தோல்வியில் இருந்த பேசில் திருமணத்திற்கு சம்மதிக்காமல் இருந்துவந்த நிலையில் மணப்பெண்ணின் அண்ணன் பிரித்விராஜ் பேசி திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பார். ஒரு கட்டத்தில் கல்யாணப் பெண்ணுடன் பேசுவதை விட மாமனும் மச்சானும் அதிகமாக பேசிக்கொண்டே இருப்பார்கள்.
இந்த நிலையில் பிரித்விராஜ் ஒரு சில காரணங்களால் தனது மனைவி நிக்கிலா விமலை பிரிந்து வாழ்வார். அவர்களை பேசியே பேசில் ஜோசஃப் சேர்த்து வைப்பார். இதனைத் தொடர்ந்து திருமணத்திற்காக கேரளாவிற்கு வரும் பேசில் ஜோசஃப் பிரித்வியுடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டுகொண்ட்டிருக்கிறார்.
அப்போதுதான் அங்கு வரும் பிரித்விராஜின் மனைவி நிக்கிலா விமல் தான் பேசில் ஜோசஃபின் முன்னாள் காதலி என்பது தெரியவருகிறது. இதனைத் தொடர்ந்து அந்த திருமணம் நடந்ததா? இதனை பிரித்விராஜ் எப்படி புரிந்துகொண்டார் என்பதே படத்தின் கதை. மிகவும் சீரியசான கதையை காமெடியாக இயக்குநர் கொண்டுசென்று இருப்பது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.
Also Read… The GOAT : தளபதி vs இளைய தளபதி.. தளபதி விஜய்யின் தி கோட் வெளியாகி ஓராண்டு நிறைவு!
குருவாயூர் அம்பலநடையில் படத்தின் ட்ரெய்லர் இதோ:
Also Read… Ghatti : அனுஷ்காவின் காட்டி திரைப்படம் எப்படி இருக்கு? எக்ஸ் விமர்சனங்கள் இதோ!