Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பராசக்தி படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்… உறுதி செய்த சிவகார்த்திகேயன்

Actor Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் சைமா விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டார். இந்த விழாவில் அவருக்கு அமரன் படத்திற்காக விருது கிடைத்தது. இந்த நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

பராசக்தி படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்… உறுதி செய்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Sep 2025 17:04 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan) நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் மதராஸி. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரொமாண்டிக் ஆக்‌ஷன் படமாக வெளியான் இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மினி வசந்த் நடித்துள்ளார். இவர் கன்னடத்தில் பிரபல நடியகையாக வலம் வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. படம் கடந்த 5-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் படத்தில் நாயகன் சிவகார்த்திகேயனின் காட்சிகளை விட வில்லன் வித்யூத் ஜம்வால் காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் பராசக்தி.

இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் படத்தை எழுதி இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனின் 25-வது படமான இதில் நடிகர் ரவி மோகன் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடன் இணைந்து நடிகர்கள் அதர்வா, ஸ்ரீ லீலா, அப்பாஸ், குளப்புள்ளி லீலா, தேவ் ராம்நாத், பிருத்வி ராஜன், குரு சோமசுந்தரம்
பேசில் ஜோசஃப், பாப்ரி கோஷ் என பலர் நடித்து வருகின்றனர். பிரபல தயரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் சார்பாக இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார்.

பராசக்தி படத்தில் நடிக்கும் பாகுபலி பட வில்லன்:

இந்த நிலையில் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அவ்வபோது படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. அந்த வகையில் முன்னதாக பாகுபலி படத்தின் வில்லனாக மாஸ் காட்டிய ராணா இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்ட்பாட்டில் இருக்கும் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது.

இந்த நிலையில் சமீபத்தில் துபாயில் நடைப்பெற்ற சைமா விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் ராணா டகுபதி பராசக்தி படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read… கூலி படத்தில் தலைவர் ரஜினிகாந்த் பக்கதுல நிக்கிறதே போதும் எனக்கு – நடிகர் உபேந்திரா

இணையத்தில் வைரலாகும் சிவகார்த்திகேயனின் பேச்சு:

Also Read… லோகா சாப்டர் 1: சந்திரா படத்தின் மூத்தோன் இவர்தான்… படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!