Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Suriya : பெயருக்கு முன்னாள் அடைமொழி வருவது எனக்கு பிடிக்கவில்லை – சூர்யா ஓபன் டாக்!

Suriya Talks About Epithet : நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்து வருகிறார். இவர் படங்களில் நடிப்பதைத் தொடர்ந்து, திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். இந்நிலையில் இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், தனது பெயரின் முன் அடைமொழி வைக்காததற்குக் காரணம் பற்றிப் பேசியுள்ளார்.

Suriya : பெயருக்கு முன்னாள் அடைமொழி வருவது எனக்கு பிடிக்கவில்லை – சூர்யா ஓபன் டாக்!
சூர்யாImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 08 Sep 2025 06:30 AM IST

தமிழ் சினிமாவில் சூர்யா (Suriya) நடிகர் தளபதி விஜயின் ‘நேருக்கு நேர்’ (Nerukku Ner) என்ற படத்தின் மூலம்தான் அறிமுகமானார். இப்படமானது கடந்த 1997ம் ஆண்டு வெளியானது. இயக்குநர் வசந்த் (Vasanth) இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார். இப்படத்தின் மூலமாகத்தான் சூர்யா சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்தடுத்த இயக்குநர்களுடனும் படங்களில் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். அவ்வாறு அவருக்கு அமைந்த சூப்பர் ஹிட் இயக்குநர்தான் பாலா (Bala). இவர் இயக்குநர் பாலா இயக்கத்தில் நந்தா (Nandha) படத்தில் இணைந்து நடித்திருந்தார். இப்படத்தில் நடிகை லைலா சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்குப் பின்னர்தான் சூர்யாவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகள் இருந்தது.

அதை தொடர்ந்து, பிதாமகன் படத்தில் இணைந்து நடித்திருந்தார். மேலும் கடந்த 2025 ஜனவரி மாதத்தில் வெளியான, வணங்கான் படத்திலும் சூர்யா நடிக்கவிருந்தார். பின் சில காரணங்களால் இயக்குநர் பாலாவே, சூர்யாவை இப்படத்தில் நடிக்கவேண்டாம் என்று கூறினார். இதை அடுத்ததாக பல ஹிட் படங்களை நடிகர் சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சூர்யா முன்னதாக கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் , தனது பெயருக்கு முன் அடைமொழி வைக்காததற்குக் காரணம் பற்றி ஓபனாக பேசியுள்ளார். அவர் அதில் தனது பெயரின் முன் தனது தந்தையின் இன்ஷியலை தவிர வேறு எதுவும் பயன்படுத்துவதற்கு விருப்பமில்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசியிருந்தது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

சூர்யாவின் லேட்டஸ்ட் வைரல் புகைப்பட பதிவு :

இதையும் படிங்க : ரசிகர்களின் பேரன்பிற்கு சொந்தகாரரான மம்முட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

அடைமொழி வைக்காதது குறித்து சூர்யா பேச்சு :

நடிகர் சூர்யா முன்னதாக கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில், அவரிடம் தொகுப்பாளர், “நீங்கள் ஏன் மற்ற நடிகர்களைப் போல் பெயருக்கு முன் அடைமொழியை வைக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு நடிகர் சூர்யா, எனக்கு பொதுவாக என்னுடைய இன்ஷியலை தவிர வேறு எந்தப் பெயர்களையும் எனது பெயருக்கு முன் போடுவதற்குப் பிடிக்கவில்லை. மேலும் படங்களிலும் எனது பெயரின் முன் மற்ற பெயர்களைப் பயன்படுத்த விரும்பவில்லை. அதற்கான அவசியமும் எனக்கில்லை. ஏனென்று தெரியவில்லை. எனக்கு அடைமொழி வைப்பதில் துளியும் விருப்பமில்லை” என நடிகர் சூர்யா ஓபனாக பேசியிருந்தார்.

இந்த நேர்காணல் வீடியோவானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் சூர்யா தனது பெயருக்கு முன் வேறு எந்தவிதமான பெயர்களையும் பயன்படுத்தாததற்கு அதுதான் காரணமா? என்று கூறிவருகின்றனர். மேலும்  சூர்யா சொன்ன விஷயமானது, அடைமொழி பயன்படுத்தாததற்குக் காரணம் பற்றியும் அனைவருக்கும் சந்தேகங்கள் தீர்ந்திருக்கும்.

இதையும் படிங்க : அதிரடி ஆக்ஷ்ன் தெறிக்குதே.. பிருத்விராஜின் ‘விலாயத் புத்தா’ பட டீசர்!