கூலி படத்தில் தலைவர் ரஜினிகாந்த் பக்கதுல நிக்கிறதே போதும் எனக்கு – நடிகர் உபேந்திரா
Upendra Rao: கன்னட சினிமாவில் பிரபல இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வருபவர் உபேந்திரா ராவ். இவர் தமிழில் அவ்வபோது படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த கூலி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் உபேந்திரா ராவ (Upendra Rao). இவர் நடிகர், இயக்குநர் மற்றும் எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக கன்னட சினிமாவில் வலம் வருகிறார். கடந்த 1989-ம் ஆண்டு முதல் கன்னட சினிமாவில் நடிகராக நடித்து வரும் இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தொடர்ந்து சினிமாவில் நடிகராக பலப் படங்களை ஹிட் கொடுத்தது மட்டும் இன்றி இயக்குநராகவும் பலப் படங்களை சினிமாவில் ஹிட் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கன்னட சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் நிலையில் கன்னட மொழியில் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளிலும் தொடர்ந்து நடிகராக நடித்து வருகிறார். அப்படி இவர் நேரடியாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன படம் சத்யம். நடிகர் விஷால் நாயகனாக நடித்து இருந்த இந்தப் படத்தில் நடிகர் உபேந்திரா முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார்.
இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் உபேந்திரா ராவ் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடித்துள்ள படம் கூலி. இந்தப் படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ள நிலையில் நடிகர் உபேந்திரா ராவ் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். கூலி படத்தில் உபேந்திர ராவின் காலீஷா கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




தலைவரோட ஒரே ஃப்ரேம்ல இருக்கதே எனக்கு பெருமை:
இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் உபேந்திராவின் கதப்பாத்திரம் க்ளைமேக்ஸ் காட்சியில் ஒரு 15 நிமிடங்கள் மட்டுமே இருக்கும். இதனைப் பார்த்த அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவே இருந்தது. இதுகுறித்து சமீபத்திய விழா ஒன்றில் நடிகர் உபேந்திராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த நடிகர் உபேந்திரா ராவ் நான் தலைவருடன் ஒரே ஃப்ரேமில் நடித்ததே பெரிய பாக்கியம் என்று நினைக்கிறேன். என் கனவில் கூட நினைக்காத ஒன்று நடந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரஜினிகாந்த் பக்கதில் நின்னதே பெரிய பாக்கியமாக கருதுகிறேன். அதுவே எனக்கு போதும் என்றும் உபேந்திரா அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
Also Read… இந்தியாவில் இதை ஊக்குவிப்பது முக்கியம்.. மோட்டார் ஸ்போர்ட்ஸ் குறித்து அஜித் குமார் பேச்சு!
இணையத்தில் கவனம் பெறும் உபேந்திராவின் பேச்சு:
Question: Your fans were a bit disappointed that your screen time was very less in #Coolie.#Upendra: For me, it was a great blessing from Thalaivar. Just standing beside him itself is more than enough, I feel grateful for that.#LokeshKanagarajpic.twitter.com/w4tpxE6Vch
— Movie Tamil (@_MovieTamil) September 6, 2025
Also Read… இயக்குநர் பாலாவிற்கு நன்றி சொல்ல வேண்டும் – ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன விசயம்