Sukumar: புஷ்பா 3 படம்.. இயக்குநர் சுகுமார் சொன்ன சர்ப்ரைஸ் தகவல்!
pushpa 3 Movie Update : தென்னிந்திய சினிமாவில் கடந்த 2024ம் ஆனது இறுதியில் வெளியாகி, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப்பார்க்கவைத்த படம் புஷ்பா 2. இப்படத்தின் வெற்றியை அடுத்து புஷ்பா 3 படம் உருவாக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், அது குறித்து இயக்குனர் சுகுமார் அப்டேட் கொடுத்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்து வருபவர் அல்லு அர்ஜுன் (Allu Arjun). இவரின் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதியில் வெளியான பான் இந்திய படம்தான் புஷ்பா தி ரூல் (Pushpa The Rule). இந்த படமானது வெளியாகி பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இப்படமானது கடந்த 2022ம் ஆண்டு வெளியான புஷ்பா 1 படத்தின் தொடர்ச்சியாக வெளியாகியிருந்தது. இந்த படத்தை இயக்குநர் சுகுமார் (Sukumar) இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது தயாரித்திருந்தது. மேலும் இதில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக, பான் இந்திய நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நடித்திருந்தார்.
இந்த படத்தின் வெற்றியை அடுத்ததாக புஷ்பா 3 படமானது உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுகுமார், புஷ்பா தி ராம்பேஜ் படமானது உருவாகவுள்ளதாக உறுதியளித்துள்ளார். அவர் பேசிய விஷயம் குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க : பாலா படத்துக்கு இப்படி ஒரு நிலையா? – கலங்கிய இயக்குநர்!
புஷ்பா 3 குறித்து அப்டேட் கொடுத்த சுகுமார் :
அந்த நிகழ்ச்சியில் , தொகுப்பாளர் இயக்குநர் சுகுமாரிடம், சார் புஷ்பா 3 தி ராம்பேஜ் படம் உருவாகுமா , ரசிகர்கள் உங்களிடையே அதிகம் எதிர்பார்க்கிறார்கள் ? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதில் பேசிய சுகுமார், “புஷ்பா 3 தி ராம்பேஜ் படம் நிச்சயமாக உருவாகும் என அப்டேட் கொடுத்துள்ளார். இந்த தகவலானது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் மேடையில் இயக்குநர் சுகுமாருடன், நடிகர் அல்லு அர்ஜுனும் இருந்திருந்தார்.
இதையும் படிங்க : கல்யாணி பிரியதர்ஷனை தவிர யாரும் அந்த வேடத்தில் நடிக்கமுடியாது – துல்கர் சல்மான் பேச்சு!
இயக்குநர் சுகுமார் புஷ்பா 3 படம் உருவாகும் என அறிவித்த நிலையில், அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்த படமானது உருவானால், 2028ம் ஆண்டு வெளியாக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் சுகுமார் புஷ்பா 3 படம் பற்றி பேசிய வீடியோ :
Dir Sukumar Recent
– #Pushpa 3 Rampage will Be There For Sure.#AlluArjun | #AA22xA6pic.twitter.com/RMGDJuGAKF— Movie Tamil (@_MovieTamil) September 6, 2025
அல்லு அர்ஜுனின் புதிய படம் :
நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குநர் அட்லீ குமார் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படமானது A06xAA22 என தற்காலிக டைட்டிலில் அழைக்கப்பட்டு வருகிறது. இதில் அல்லு அர்ஜுனனுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோன் நடித்து வருகிறார்.இந்த படமானது சுமார் ரூ. 600 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என கூறப்படுகிறது. இப்படமானது வரும் 2027ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.