Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சினிமாவில் 17 வருடங்களை கடந்த நடிகர் நானி – வைரலாகும் இன்ஸ்டா பதிவு

Actor Nani: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியளில் இருப்பவர் நடிகர் நானி. இவரை ரசிகர்கள் அன்புடன் நேச்சுரல் ஸ்டார் என்று அழைப்பார்கள். தெலுங்கு சினிமாவில் இவர் பலப் படங்களில் நடித்தாலும் தென்னிந்திய மொழிகளில் இவருக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் 17 வருடங்களை கடந்த நடிகர் நானி – வைரலாகும் இன்ஸ்டா பதிவு
நடிகர் நானி Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Sep 2025 20:35 PM IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நானி (Actor Nani). தனது இயல்பான நடிப்பால் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மட்டும் இன்றி தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய ரசிகர்களையும் தன்வசம் வைத்துள்ள இவரை ரசிகர்கள் அன்புடன் நேச்சுரல் ஸ்டார் என்று அழைக்கின்றனர். இவரது நடிப்பில் வெளியான பெரும்பான்மையான படம் தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் நானி தற்போது சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதன்படி நடிகர் நானி தெலுங்கு சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனப் படம் அஷ்ட சம்மா. இயக்குநர் மோகன கிருஷ்ணா இந்திரகாந்தி எழுதி இயக்கிய இந்தப் படம் கடந்த 5-ம் தேதி செப்டம்பர் மாதம் 2008-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில் இன்று இந்தப் படம் வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனால் நடிகர் நானியும் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி 17 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துகளை நடிகர் நானிக்கு தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் அனைவரின் அன்புடனும் 17 ஆண்டுகள்:

இந்த நிலையில் நடிகர் நானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு மாஸாக ஒரு ப்ளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் உங்களின் தீராத காதலால் இந்த 17 வருடங்கள் வந்துள்ளது. நான் இப்போதுதான் தொடங்குகிறேன் என்றும் அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இந்த போட்டோ தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… லோகா மலையாள சினிமாவில் எங்களுக்கு பெரிய பட்ஜெட் படம் – நடிகர் துல்கர் சல்மான்

நடிகர் நானி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Nani (@nameisnani)

நடிகர் நானியில் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படங்கள்:

நடிகர் நானி நடிப்பில் பலப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் ஈகா, யெட்டோ வெள்ளிப்போயிந்தி மனசு, எவடே சுப்ரமணியம், ஜென்டில்மேன், நேனு லோக்கல், மிடில் கிளாஸ் அப்பாயி, ஜெர்சி, நானிஸ் கேங் லீடர், ஷியாம் சிங்க ராய், தசரா, ஹாய் நன்னா, சரிபோதா சனிவாரம் ஆகியவை ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… Dhanush : தனுஷிற்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை! அட இந்த படத்திலா?