Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அரசியலுக்கு வருவதை உறுதிசெய்த பா.ரஞ்சித்? வைரலாகும் வீடியோ

Pa Ranjith Talks About Politics: இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக தண்டகாரண்யம் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்க, அதியன் ஆதிரை இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படம் தொடர்பாக அளித்த பேட்டியில் பா.ரஞ்சித் அரசியல் குறித்து பேசியிருக்கிறார்.

அரசியலுக்கு வருவதை உறுதிசெய்த பா.ரஞ்சித்?  வைரலாகும் வீடியோ
பா.ரஞ்சித்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 04 Sep 2025 19:40 PM IST

இயக்குநர் பா.ரஞ்சித் (Pa Ranjith) தற்போது அட்டகத்தி தினேஷ், ஆர்யா நடிப்பில் வேட்டுவம் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக தண்டகாரண்யம் என்ற படத்தை தயாரித்துள்ளார். அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தை அதியன் ஆதிரை இயக்கியிருக்கிறார்.  இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) ஆகியோர் கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தனர். அப்போது இயக்குநர் பா.ரஞ்சித் தனது அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

அரசியல் வருகை குறித்து பா.ரஞ்சித்

பைசன் படம் தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தனர். அப்போது தொகுப்பாளர் பா.ரஞ்சித்திடம், நீங்கள் நடிப்பீர்களா என கேட்டார். அதற்கு இல்லை மறுத்தார். பின்னர் அவரிடம் தொகுப்பாளர் மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் கேட்டால் என்ன செய்வீர்கள் என கேட்டார். அதற்கு பதிலளித்த பா.ரஞ்சித், நான் நடிகன் ஆக வேண்டும் என்ற தேவை எனக்கு இல்லை. ஏற்கனவே நிறைய வேலைகள் இருக்கு. டைரக்ஷன் என்ற வேலை இருக்கு. அதை விட்டால் வேறு ஒரு வேலை இருக்கு. அந்த வேலைக்கு சென்றுவிடுவேன் என்றார்.

இதையும் படிக்க : கபடி வீரனாக துருவ் விக்ரம்.. பைசன் படத்திலிருந்து வெளியானது ‘தீக்கொழுத்தி’ பாடல்!

உடனே 2026ல் எதுவும் வேலையா என தொகுப்பாளர் கேட்க, சட்டென ஆம் என்றார். அதிர்ச்சியடைந்த மாரி செல்வராஜ், 2026லா? என கேட்க, அவ்வளவு சீக்கிரம் இல்லை என்றார். இதனையடுத்து அவரது ரசிகர்கள் ரஞ்சித் அரசியல் வருகையை உறுதி செய்ததாக மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

பா.ரஞ்சித் பேசிய வீடியோ வைரல்

 

பா.ரஞ்சித் தனது படங்களில் சாதிய ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராக தனது குரலை பதிவு செய்து வருகிறார். மேலும் சமூக பிரச்னைகளுக்கும் அவர் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் அரசியல் வருகை குறித்து அவர் பேசியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க : லோகா படம் உங்களுக்கு புடிச்சு இருக்கா? அப்போ மலையாளத்தில் மின்னல் முரளி படத்தை மிஸ் பண்ணிடாதீங்க

பைசன்

பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17, 2025 அன்று வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் இருந்து சமீபத்தில் தீக்கொழுத்தி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பரியேறும் பெருமாள் படத்துக்கு பிறகு பா.ரஞ்சித் – மாரி செல்வராஜ் இந்தப் படத்தில் கைகோர்த்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.