Thandakaaranyam : ‘தண்டகாரண்யம்’ படத்தின் ரிலீஸ் எப்போது? பா. ரஞ்சித் வெளியிட்ட அப்டேட் இதோ!
Thandakaaranyam Release Date Announced : தமிழில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அட்டகத்தி தினேஷ். இவர் மற்றும் கலையரசனின் முன்னணி நடிப்பில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் படம் தண்டகாரண்யம். தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது.

கோலிவுட்டில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான லப்பர் பந்து (Lubber pandhu) திரைப்படத்தில் கெத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றவர் நடிகர் தினேஷ் (Attakathi Dinesh). அந்த படத்தை அடுத்து இவரின் முன்னணி நடிப்பில் உருவாகிவந்த திரைப்படம் தண்டகாரண்யம் (Thandakaaranyam ). இப்படத்தில் அட்டகத்தி தினேஷுடன் முன்னணி வேடத்தில் நடிகர் கலையரசனும் (Kalaiyarasan) நடித்துள்ளார். இந்த தண்டகாரண்யம் படமானது கலையரசன் மற்றும் அட்டகத்தி தினேஷ் என இவர்கள் இருவரின் கூட்டணியில் மிகப் பிரம்மாண்டமாகத் தயாராகியிருக்கிறது. இந்த படத்தை பா. ரஞ்சித்தின் (Pa. Ranjith), நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனமானது தயாரித்துள்ளது. இப்படமானது அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த படத்தை இயக்குநர் அதியன் அதிரை (Athiyan athirai) இயக்கியுள்ளார். தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி , இப்படமானது வரும் 2025, செப்டம்பர் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. தற்போது வெளியான இந்த அறிவிப்பானது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற வருகிறது.




இதையும் படிங்க : தலைவன் தலைவி சூப்பர் ஹிட்.. வெற்றி விழாவைப் பிரம்மாண்டமாகக் கொண்டாடிய படக்குழு!
தண்டகாரண்யம் படத்தின் ரிலிஸ் தேதியை வெளியிட்ட படக்குழு
A wild truth behind wildlife and its warriors 🔥#ThandakaaranyamFromSept19 – Mark the dates 🗓#தண்டகாரண்யம் ❗ உண்மை முழங்கும், உலகமெங்கும்.#Thandakaaranyam @beemji @LearnNteachprod @AthiraiAthiyan @KalaiActor #Dinesh @Riythvika @VinsuSam @actorshabeer @ActorMuthukumar pic.twitter.com/KJ4R8X8lBP
— Neelam Productions (@officialneelam) August 18, 2025
இந்த படத்தில் நடிகர் கலையரசன் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பதாகவும், நடிகர் அட்டகத்தி தினேஷ் அதிரடி ஆக்ஷ்ன் ஹீரோவாக நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர்களுடன் நடிகர்கள் ரித்விகா பன்னீர்செல்வம், வின்சு சாம், முத்துக்குமார். சபீர் கல்லரக்கல் என பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படமானது கிராமம் சார்ந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.
இயக்குநர் அதியன் அதிரை ஏற்கனவே, நடிகர் அட்டகத்தி தினேஷை வைத்து, இரண்டாம் உலகப்போரின் கடைசிக் குண்டு என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தை அடுத்து இவர் இயக்கியிருக்கும் படம்தான் இந்த தண்டகாரண்யம்.
இதையும் படிங்க : கூலி படத்தில் வில்லனாக மிரட்டிய நாகார்ஜுனா..! தமிழ் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
தண்டகாரண்யம் படத்திற்கு கிடைத்த சென்சார் விவரம்
இந்த தண்டகாரண்யம் படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு சென்சார் குழு யு/ஏ தர சான்றிதழை வழங்கியுள்ளது. இப்படம் வரும் 2025, செப்டம்பர் 19ம் தேதியில் வெளியாகும் நிலையில், படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .