Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Gandhi Kannadi: பாலா படத்துக்கு இப்படி ஒரு நிலையா? – கலங்கிய இயக்குநர்!

காந்தி கண்ணாடி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், படத்தின் விநியோகத்தில் சில தடைகள் ஏற்பட்டுள்ளதாக இயக்குநர் ஷெரீஃப் குற்றஞ்சாட்டியுள்ளார். பல தியேட்டர்களில் படத்தின் பேனர்களை கிழிக்கப்பட்டுள்ளதாகவும், படம் திரையிடப்படாமல் தடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Gandhi Kannadi: பாலா படத்துக்கு இப்படி ஒரு நிலையா? – கலங்கிய இயக்குநர்!
காந்தி கண்ணாடி படம்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 06 Sep 2025 06:46 AM IST

சின்னத்திரை மூலம் ரசிகர்களிடம் நன்கு பரீட்சையமான பாலா ஹீரோவாக நடித்துள்ள காந்தி கண்ணாடி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அப்படத்தின் இயக்குநர் ஷெரீஃப் திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். நேற்று (செப்டம்பர் 5) படம் தியேட்டரில் வெளியான நிலையில் படக்குழுவினர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் சென்னை கமலா தியேட்டரில் படம் பார்த்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குநர் ஷெரீஃப், “காந்தி கண்ணாடி படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் நிறைய இடங்களில் படம் தியேட்டரில் திரையிடப்படவில்லை என போன் வருகிறது. இது ஏன் இப்படி நடக்கிறது என தெரியவில்லை. சில தியேட்டர்களில் காந்தி கண்ணாடி படத்தின் பேனரை கூட வைக்க விடாத சூழல் உண்டாகியுள்ளது. அதையும் மீறி வைத்தால் கிழித்து விடுகிறார்கள். எனக்கு எதுவும் புரியவில்லை.

நான் சைக்கிளில் தெரு தெருவாக சென்று 50 பைசா, ஒரு ரூபாய்க்கு போஸ்டர் ஒட்டி வளர்ந்தவன். அதேபோல் கேபிஒய் பாலா காரைக்காலில் இருந்து சினிமா கனவுடன் ஓடி வந்த பையன். நாங்க இரண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணிருக்கோம். ஏன் அடிக்கிறார்கள் என தெரியவில்லை. படம் ஓடி விடக்கூடாது என செலவு செய்கிறார்கள். ஆனால் அந்த பணத்தை 4 பேருக்கு நல்லது செய்ய செலவு செய்யுங்கள்.

Also Read: அனிருத்தின் வளர்ச்சியைப் பார்த்தா பிரமிப்பா இருக்கு – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

அதையும் மீறி எங்களை அடிக்க வேண்டும் என்றால் கன்னத்தில் வந்து அறையுங்கள். வாங்கி கொள்கிறோம். மக்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்துருக்கிறார்கள். அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் எங்களுக்கு உறுதுணையாக இருந்த நடிகர் ராகவா லாரன்ஸூக்கும் இந்த நேரத்தில் நன்றியை கூறிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். அவரின் இந்த குற்றச்சாட்டு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காந்தி கண்ணாடி படம்

Also Read:  ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. ரஜினிகாந்தின் கூலி பட ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது!

காந்தி கண்ணாடி படத்தில் ஹீரோயினாக நமிதா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இயக்குநர் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். விவேக் – மெர்வின் இசையமைத்துள்ள இந்த படத்தை ஆதிமூலம் கிரியேஷன் சார்பாக ரவி கிரண் தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க கிட்டதட்ட 50 ஹீரோயின்களிடம் கதை சொல்லியும் அனைவரும் நடிக்க மறுத்த நிலையில் நமிதா மட்டுமே  ஒப்புக்கொண்டார் என பட நிகழ்ச்சியில் பாலா  பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்த நிலையில் படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.