Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வம்புக்கு நீயா இழுக்காத என் கிட்ட மோதி இறக்காத… சிக்கிடு பாடலின் வீடியோவை வெளியிட்ட கூலி படக்குழு!

Chikitu - Official Video Song | நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கூலி. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் இண்ட்ரோ பாடலாக வெளியானது சிக்கிடு. இந்தப் பாடல் திரையரங்குகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில் படத்தின் வீடியோ பாடலைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

வம்புக்கு நீயா இழுக்காத என் கிட்ட மோதி இறக்காத… சிக்கிடு பாடலின் வீடியோவை வெளியிட்ட கூலி படக்குழு!
கூலிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Sep 2025 19:56 PM IST

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் கடந்த 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இய்க்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய இந்தப் படம் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்ததால் 18 வயதிற்கு அதிகமானவர்கள் மட்டுமே படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கும் நிலை ஏற்பட்டது. படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு பிறகு படத்திற்கு யு / ஏ சான்றிதழ் கோரி படக்குழு நீதிமன்றத்தை நாடியது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கூலி படக்குழு மற்றும் தணிக்கை குழுவின் வாதங்களை கேட்ட பிறகு கூலி படக்குழு யு/ஏ சான்றிதழ் கோரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் படம் வெளியாவதற்கு முன்பாக கூலி படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து 6 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஏ சான்றிதழ் காரணமாக குழந்தைகளுடன் திரையரங்கிற்கு படம் பார்க்க வரும் கூட்டம் வராத காரணத்தால் 4 வாரங்கள் முடிவடைவதற்கு முன்பே படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி படம் வருகின்ற 11-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூலி படத்திலிருந்து ரஜினியின் இண்ட்ரோ பாடல் வெளியானது:

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் படங்களில் அவரது இண்ட்ரோ பாடல்களுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிகம். அந்த வகையில் கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் இண்ட்ரோ பாடலான சிக்கிடு பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் தொடர்ந்து படத்தில் இருந்து லிரிக்கள் வீடியோக்களை வெளியிட்டு வந்த படக்குழு தற்போது வீடியோ பாடலை வெளியிட்டுள்ளது. அதன்படி கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் சிக்கிடு பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… இயக்குநர் பாலாவிற்கு நன்றி சொல்ல வேண்டும் – ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன விசயம்

சிக்கிடு பாடலின் வீடியோ பாடல் இதோ:

Also Read… நான் இயக்கிய படங்களில் எனக்கு பிடித்த பெண் கதாப்பாத்திரம் இதுதான் – இயக்குநர் வெற்றிமாறன்