Dulquer Salmaan : லோகா படத்திற்கு கிடைத்த வரவேற்பு.. சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்த துல்கர் சல்மான்!
Dulquer Salmaan About Lokah Movie Sequel : துல்கர் சல்மானின் தயாரிப்பில் வெளியான திரைப்படம் லோகா சாப்டர் 1: சந்திரா. இப்படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் குறித்து துல்கர் சல்மான் அப்டேட் கொடுத்துள்ளார்.

இந்த 2025ம் ஆண்டு வெளியான படங்களில் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த திரைப்படம்தான் லோகா சாப்டர் 1; சந்திரா (Loka Chapter 1; Chandra). இந்த படத்தை மலையாள இயக்குநர் டோமினிக் அருண் (Dominic Arun) இயக்கிய நிலையில், நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) இப்படத்தை தயாரித்திருந்தார். இந்த படமானது சூப்பர் வுமன் கதைக்களத்துடன், ஹாலிவுட் பட ரேஞ்சில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் முன்னணி கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan) நடிக்க, அவருடன் நடிகர் நஸ்லென் (Naslen) இணைந்து நடித்திருந்தார் இந்த படமானது ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2025 ஆகஸ்ட் 28ம் தேதியில் வெளியாகியிருந்தது. இந்நிலையில், 6 நாட்களில் சுமார் ரூ 101 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதை முன்னிட்டு இப்படத்தின் தமிழ் சக்ஸஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய லோகா படத்தின் தயாரிப்பாளர் துல்கர் சல்மான், லோகா படத்தை 5 பாகங்களாக எடுக்க முடிவு செய்திருப்பதாக ஓபனாக பேசியுள்ளார். அவர் பேசியது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க : சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை வென்ற டோவினோ தாமஸ்.. அட இந்த படத்துக்காகவா?
5 பாகங்களாக லோகா உருவாகும் என துல்கர் சல்மான் பேச்சு
2025 செப்டம்பர் 4ம் தேதியில் இந்த லோகா படத்தின் தமிழ் சக்ஸஸ் மீட் நடைபெற்றிருந்தது. அதில் துல்கர் சல்மான் முதல் கல்யாணி பிரியதர்ஷன் வரை பல பிரபலங்களும் கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் பேசிய துல்கர் சல்மான், “நான் இப்படத்தில் நடிக்கவில்லை, ஒரு டீச்சராக பசங்களை கூட்டி வந்திருக்கிறேன்.இந்த லோகா படத்தை நாங்கள் கேரளா அளவில் சின்னதாகத்தான் ஆரம்பித்தோம், இப்போது எல்லா இடங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்திற்காக உழைத்தவர்கள் அனைவரும், அவர்களின் படத்தை போல் உழைத்தார்கள்.
இதையும் படிங்க : சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தை திரையரங்கில் பார்த்த ஷாலினி அஜித்… வைரலாகும் போட்டோஸ்
துல்கர் சல்மானின் லோகா படம் குறித்த பதிவு
Thank you all for this endless ocean of love !#Lokah #TheyLiveAmongUs@DQsWayfarerFilm @dulQuer @dominicarun@NimishRavi@kalyanipriyan@naslen__ @JxBe @chamanchakko @iamSandy_Off @santhybee @AKunjamma pic.twitter.com/cvu4XHDzi5
— Wayfarer Films (@DQsWayfarerFilm) September 3, 2025
மேலும்இந்த படத்தின் கதை சொன்ன மறுநாளே கல்யாணி ட்ரெய்னிங்கில் இறங்கிவிட்டார். மேலும் இந்த லோகா படத்தை 5 பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளோம். நானும் எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறேன், இப்படி ஒரு வரவேற்பை பார்க்கவில்லை. அதற்கு மரியாதையாக அடுத்தடுத்த பாகங்களை உடனே உருவாக்குவோம்.
லோகா மாதிரி இன்னும் அடுத்தடுத்த பாகங்களை தருவோம். எனது பேனரின் கீழ் நான் மட்டும் படங்களில் நடிக்கவில்லை , மற்ற நடிகர்களை வைத்தும் எனது பேனரில் படங்களை தயாரித்து வருகிறேன்” என்று அந்த நிகழ்ச்சியில் துல்கர் சல்மான் பேசியிருந்தார்.