2 நாட்களில் ரூபாய் 50 கோடி கலெக்ஷன்… மதராஸி படக்குழு வெளியிட்ட அப்டேட்
Madharaasi Movie Collection : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் மதராஸி. படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படம் இரண்டு நாட்களில் ரூபாய் 50 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan) நடிப்பில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த படம் மதராஸி. சுமார் 1.5 ஆண்டுகளுக்கு மேலாக நடைப்பெற்ற இந்தப் படத்தின் பணிகள் நிறைவடைந்து தற்போது படத்தை திரையரங்குகளில் வெளியிட்டுள்ளனர். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து காணப்பட்டது. அதன்படி படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்கள் வெளியாகும் போது ரசிகர்ளிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் வெளியாவதற்கு முன்பாக படத்தில் இருந்து வெளியான டீசர் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படம் கடந்த 5-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.
ரொமாண்டிக் ஆக்ஷன் பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகின்றது. மேலும் 2020-ம் ஆண்டு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் சினிமாவில் இறுதியாக தர்பார் படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படத்திற்கு பிறகு சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் இவரது இயக்கத்தில் படம் வெளியாகி உள்ளது. இந்தப் படம் ஏ.ஆர்.முருகதாஸின் கம்பேக்காக தமிழ் சினிமாவில் இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.




2 நாட்களில் ரூபாய் 50 கோடி வசூலித்தது மதராஸி படம்:
படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து தொடர்ந்து கலவையான விமர்சனத்தையேப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படம் வெளியாகி 2 நாட்கள் நிறைவடைந்த நிலையில் படம் இதுவரை உலக அளவில் ரூபாய் 50 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தனது அதிகாரப்பூர எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
மதராஸி படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
CARNAGE AT THE BOX OFFICE 🔥🔥🔥#Madharaasi collects a gross of 50 CRORES in 2 days worldwide ❤🔥❤🔥
The madness continues with superb bookings on Day 3 💥💥
Book your tickets now!
🎟️ https://t.co/DiYIeLe7q1#MadharaasiMadness #Madharaasi#BlockbusterMadharaasi pic.twitter.com/ADjfp5Ai0n— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) September 7, 2025