Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அஷ்வினாக அருண் விஜய்…. வெளியானது தனுஷின் இட்லி கடை பட அப்டேட்!

Dhanush's Idly Kadai : பா.பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்களுக்கு பிறகு நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் படம் இட்லி கடை. இந்தப் படத்தில் நடிகர் அருண் விஜய் நடித்திருக்கும் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

அஷ்வினாக அருண் விஜய்…. வெளியானது தனுஷின் இட்லி கடை பட அப்டேட்!
தனுஷ் - அருண் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 06 Sep 2025 18:38 PM IST

நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் நடிகர் தனுஷ் (Dhanush). இதுவரை பா.பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என 3 படங்களை இயக்கியுள்ள தனுஷ், 4வதாக இட்லி கடை (Idly Kadai) படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இந்தப் படம் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் தனுஷுடன் நித்யா மேனன், அருண் விஜய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து புதிய போஸ்டரை டான் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அஷ்வினாக அருண் விஜய்

இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் நடிகர் அருண் விஜய்யின் போஸ்டர் செப்டம்பர் 6, 2025 மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது. நடிகர் அருண் விஜய் அஷ்வின் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் பாக்ஸராக நடித்துள்ளதாகவும் அவர் தான் இந்தப் படத்தின் வில்லனாக நடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன்.. மதராஸி முதல் நாள் வசூல் இவ்வளவா?

இட்லி கடை படத்தின் புதிய போஸ்டர்

 

திரையுலகில் அடியெடுத்து வைக்கும் இன்பன் உதயநிதி

பிரபல நடிகரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதியின் மகன் இன்பன் உதயநிதி ரெட் ஜெயண்ட் படத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். ரெட் ஜெயண்ட் சார்பாக அவர் வெளியிடும் முதல் படம் இட்லி கடை. சமீபத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இதனை வெளியிட்டு நடிகர் தனுஷ், இன்பன் உதயநிதியின் புதிய பயணத்துக்கு வாழ்த்துகள் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க : குடும்பத்துடன் 50வது பிறந்தநாளை கொண்டாடிய வெற்றிமாறன்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

இட்லி கடை படம் வருகிற அக்டோபர் 1, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். திருச்சிற்றம்பலம் படத்துக்கு பிறகு தனுஷ் மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு சில நாட்களே உள்ள நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.