Flipkart Big Billion Days: மாபெரும் சலுகை விற்பனை – ஐபோன் 16க்கு குவியும் ஆஃபர்கள்!
Festive Sale 2025 : இந்தியாவில் ஃபிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேய்ஸ் விற்பனை செப்டம்பர் 23, 2025 அன்று துவங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐபோன் 16 தள்ளுபடியுடன் விற்கப்படும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஆன்லைன் ஷாப்பிங் செய்ய விரும்பும் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேய்ஸ் (Big Billion Days 2025) செப்டம்பர் 23, 2025 முதல் துவங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் நடைபெறும் இந்த பண்டிகை சீசன் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஹோம் அப்ளையன்ஸ்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாபெரும் தள்ளுபடிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக செப்டம்பர் 9, 2025 அன்று அறிமுகமாகவுள்ள ஐபோனுக்கு தள்ளபுடி விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் ஐபோன் 16 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஹைலைட்ஸ்
அதிகம் எதிர்பார்க்கப்படும் செப்டம்பர் 9, 2025 அன்று ஆப்பிள் ஐபோன் 16 மாடல் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்த புதிய ஐபோன் 16 ஃபிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேய்ஸ் விற்பனையில் அதிரடி தள்ளுபடியுடன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கேலக்ஸி எஸ்24 உடன் விற்பனையில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 இந்தியாவில் ஸ்நாப் டிராகன் அப்டேட்டுன் விற்பனை செய்யப்படவிருக்கிறது. இது யூசர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த் அப்டேட் ஆகும். இவை போனின் பெர்ஃபார்மன்ஸை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக எஸ்24 மாடல்கள் Exynos சிப் உடன் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிக்க : இவ்வளவு குறைந்த விலையில் இத்தனை சிறப்பு அம்சங்களா.. வெறும் ரூ.6,099-க்கு அறிமுகமான லாவா யுவா ஸ்மார்ட் 2!
இதனுடன் சேர்ந்து, சாம்சங்க சமீபத்தில் வெளியிட்ட கேலக்ஸி எஸ்25 எஃப்இ மற்றும் கேலக்ஸி டேப் எஸ்11, போன்ற போன்களும் இந்த ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேய்ஸில் சலுகையுடன் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிராண்டட் போன்களுக்கான தள்ளுபடிகள்
மேலும் பிக் பில்லியன் டேய்ஸ் விற்பனையில் ஐபோன் 16, சாம்சங் கேலக்ஸி எஸ்24, மோட்ரோலா எட்ஜ் 60 ப்ரோ போன்ற முக்கிய ஸ்மார்ட்போன்களும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படவிருக்கிறது. அதோடு ஒன் பிளஸ் பட்ஸ் 3 டிடபுள்யூஎஸ், லேப்டாப்கள், 55 அங்குல ஸ்மார்ட் டிவிகள், வாஷிங் மெஷின்கள் உள்ளிட்டவற்றிலும் சிறப்பு சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பில்லியன் டேய்ஸ் 2025 விற்பனையில் iPhone 16, Samsung Galaxy S24, Motorola Edge 60 Pro போன்ற முக்கிய ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படவுள்ளன. அதோடு OnePlus Buds 3 TWS, Intel சக்தியூட்டும் லாப்டாப்கள், 55 அங்குல ஸ்மார்ட் டிவிகள், வாஷிங் மெஷின்கள் உள்ளிட்டவற்றிலும் சிறப்பு தள்ளுபடிகள் கிடைக்கும்.
இதையும் படிக்க : 128 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது ரியல்மி 15 டி!
வங்கி சலுகைகள்
ஃபிளிப்கார்ட்டின் அறிவிப்பு படி ஆக்சிஸ் பேங்க் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது. மேலும், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹோம் அப்ளையன்ஸ்கள் போன்ற பிரிவுகளில் டபுள் தள்ளுபடி எனப்படும் கூடுதல் சலுகைகளும் வழங்கப்படவுள்ளன.
ஃபிளிப்கார்ட் பிளஸ் மற்றும் ஃபிளிப்கார்ட் பிளாக் மெம்பர்கள் வழக்கம் போல இந்த முறையும் முன்கூட்டியே விற்பனையில் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஃபிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு ஒரு நாள் முன்னதாக சலுகைகள் கிடைத்தத குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இந்த ஆண்டும் அந்த சலுகை கிடைக்கும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.