iPhone 17 Air : மெல்லிய தோற்றம்.. அட்டகாசமான அம்சங்கள்.. முற்றிலும் புதுமையான ஐபோன் 17 ஏர் அறிமுகம்!
Apple iPhone 17 Air | ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் நேற்று (செப்டம்பர் 09, 2025) அறிமுகமாகின. இந்த ஸ்மார்ட்போன்களில் இதுவரை இல்லாத புதிய அம்சமாக ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆப்பிள் நிறுவனம் நேற்று (செப்டம்பர் 09, 2025) Awe Dropping நிகழ்ச்சியில் தனது புதிய ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Apple iPhone 17 Series Smartphones) அறிமுகம் செய்துள்ளது. இந்த சீரீஸில் ஐபோன் 17 (iPhone 17), ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro), ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) மற்றும் ஐபோன் 17 ஏர் ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத புதிய அம்சமாக இந்த ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஆப்பிளின் மிகவும் மெல்லிய தோற்றம் கொண்ட ஸ்மார்ட்போனாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான தோற்றம் மட்டுமன்றி, அட்டகாசமான அம்சங்களையும் கொண்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அட்டகாசமான டிசைன் உடன் அறிமுகமான ஐபோன் 17 ஏர்
இந்த ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன் அட்டகாசமான டிசைன் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பயன்படுத்துவதற்கு எடை குறைவாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டைட்டானியத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5.6 mm என்ற அளவில் மிகவும் மெல்லிய தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மொத்த எடை வெறும் 165 கிராம் மட்டுமே உள்ளது. எடை குறைவான அதே சமயம் அட்டகாசமான அம்சம் மற்றும் தோற்றம் கொண்ட ஸ்மார்ட்போன் வேண்டும் என்றால் இது உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
இதையும் படிங்க : Flipkart Big Billion Days: மாபெரும் சலுகை விற்பனை – ஐபோன் 16க்கு குவியும் ஆஃபர்கள்!




ஐபோன் 17 ஏர் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
இந்த ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன், ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் போலவே உள்ளது. அதாவது இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஒரே A19 Pro Chipset கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஒரே மாதிரியான பயன்பாட்டை கொண்டுள்ளன. இதில் 6.5 இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் செல்பி மேமராவில் 18 மெகா பிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. MagSafe வயர்லெஸ் சார்ஜிங் அம்சமும் இதில் உள்ளது.
இதையும் படிங்க : இவ்வளவு குறைந்த விலையில் இத்தனை சிறப்பு அம்சங்களா.. வெறும் ரூ.6,099-க்கு அறிமுகமான லாவா யுவா ஸ்மார்ட் 2!
விலை மற்றும் விற்பனை
இந்த ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.1,19,900 ஆக உள்ளது. ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போனை விட ரூ.15,000 குறைவாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ப்ரீ புக்கிங் செப்டம்பர் 12, 2025 முதல் தொடங்குகிறது. இதேபோல இந்த ஸ்மார்ட்போன் 19, 2025 முதல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.