WhatsApp : ஐபோன் மற்றும் மேக் பயனர்களை குறிவைத்து நடைபெறும் மோசடி.. வாட்ஸ்அப் எச்சரிக்கை!
WhatsApp Scam Alert | வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி பல வகையான மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் குறிப்பிட்ட சில பயனர்களை மட்டும் குறி வைத்து ஸ்பைவேர் தாக்குதல் நடைபெற்று வருவதாக வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு (Technology Development) ஏற்ப மோசடி சம்பவங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் குறிப்பிட்ட பயனர்களை மட்டும் மையப்படுத்தி மோசடி நடைபெறுவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. அதாவது, ஐபோன் (iPhone) மற்றும் மேக் (Mac) பயனர்களை டார்கெட் செய்து உலகம் முழுவதும் மோசடிகள் நடைபெறுவதை வாட்ஸ்அப் (WhatsApp) கண்டுபிடித்துள்ளது. இந்த நிலையில், எந்த வகையான மோசடி நடைபெறுகிறது, எந்த எந்த பயனர்களை மட்டும் குறி வைத்து இந்த மோசடி நடைபெறுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அதிகரிக்கும் மோசடி சம்பவங்கள்
முன்பெல்லாம் பல மணி நேரம் காத்திருந்து செய்த வேலைகளை எல்லாம் தற்போது ஒருசில நொடிகளிலேயே செய்து முடித்திவிடும் அளவிற்கு தொழில்நுட்ப அம்சங்கள் வளர்ச்சியடைந்து வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மோசடி சம்பவங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மையப்படுத்தி மோசடி செய்வது, குறிப்பிட்ட காலத்தில் மோசடி செய்வது என பல வகையான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், குறிப்பிட்ட பயனர்களை குறிவைத்து அரங்கேற்றப்படும் மோசடி சம்பவம் ஒன்று தற்போது அதிகரித்து வருவதாக வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது.
இதையும் படிங்க : Cyber Crime: தமிழ்நாட்டை அலறவிடும் 2 சைபர் மோசடிகள்.. மக்களே உஷார்!




ஐபோன் மற்றும் மேக் பயனர்களை குறிவைக்கும் மோசடி
வாட்ஸ்அப் கடந்த 90 நாட்களில் தனது பயனர்களுக்கு ஸ்பைவேர் தாக்குதல் குறித்து எச்சரிக்கை அனுப்பியுள்ளது. அதாவது, மிகவும் சக்திவாந்த தாக்குதலுக்கு பலியாக கூடும் என நினைக்கும் பயனர்களுக்கு இந்த செய்தியை அனுப்பியுள்ளது. மேலும் இந்த எச்சரிக்கையை பெறும் நபர்கள் தேவைப்படும் பட்சத்தில் நிபுணர்களின் உதவியை நாடலாம் என்றும் கூறியுள்ளது. வாட்ஸ்அப்பின் இந்த ஸ்பைவேர் தாக்குதல் எச்சரிக்கையை பெரும்பாலும் ஐபோன் மற்றும் மேக் பயனர்கள் பெற்றுள்ளனர். இதன் காரணமாக இது ஐபோன் மற்றும் மேக் பயனர்களை மையப்படுத்திய ஸ்பைவேர் தாக்குதலாக இருக்கலாம் என்று வாட்ஸ்அப் கூறியுள்ளது.
இதையும் படிங்க : ஒரே நேரத்தில் இரண்டு செயலிகளை பயன்படுத்தலாம்.. இன்ஸ்டாகிராமில் வரும் அசத்தல் அம்சம்!
மோசடிகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளும் வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் செயலியில் ஏராளமான மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அந்த நிறுவனம் பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்வது மட்டுமன்றி பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. என்னதான் பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும், மோசடி சமபவங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இந்த நிலையில், பயனர்களை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.