இன்ஸ்டாவில் வைரலாகும் 3டி மாடல்… இனி உங்க 3டி மாடலை இலவசமா உருவாக்கலாம் – எப்படி தெரியுமா?
Nano Banana : இன்ஸ்டாகிராமில் நானோ பனானா என்ற பெயரில் 3டி மாடல் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. இதனை ஜெமினி 2.5 ஃபிளாஸ் இமேஜ் என்ற கூகுளின் பதிய ஏஐ டூல் மூலம் நெட்டிசன்கள் உருவாக்கி வருகின்றனர். இதனை எப்படி உருவாக்குவது என பார்க்கலாம்.

சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் (Instagram) பலரும் தங்களது 3டி மாடல் படங்கள் மற்றும் தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளின் 3டி மாடல்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த புதிய டிரெண்டுக்கு காரணம் கூகுளின் புதிய ஏஐ கருவி. இதன் மூலம் உங்கள் 3டி மாடலை நீங்களே உருவாக்க முடியும். அதுவும் இதற்காக எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை என்பது இதன் ஹைலைட். கூகுள் வெளியிட்ட ஜெமினி 2.5 ஃபிளாஸ் இமேஜ் என அழைக்கப்படும் இந்த டூல், சமூக வலைதளங்களில் நானோ பனானா என்ற பெயரில் நெட்டிசன்களிடையே பிரபலமாகியுள்ளது. நானோ பனானா என்றால் என்ன? இதனை எப்படி பயன்படுத்துவது என இந்த கட்டுரையில் விவரமாக பார்க்கலாம்.
நானோ பனானா என்றால் என்ன ?
நானோ பனானா என்பது ஏஐ டூலின் பெயர் அல்ல. ஜெமினி 2.5 ஃபிளாஷ் இமேஜ் என்ற ஏஐ டூலை தான் நெட்டிசன்கள் இந்த பெயரால் அறிவித்து வருகின்றனர். இந்த கருவி நீங்கள் அப்லோட் செய்யும் எந்த புகைப்படத்தையும் மிக தத்ரூபமாக இருக்கும் 3டி மாடலாக மாற்றும் திறன் கொண்டது. மனிதர்கள், செல்லப்பிராணிகள், உடை என நீங்கள் அப்லோடு செய்யும் போட்டோவை அப்படியே 3 டி மாடலாக மாற்றும். உங்கள் புகைப்படத்தை அப்படியே ஒரு பொம்மை போல தோற்றமளிக்கும் வகையில் 3டி மாடலாக உருவாகும். தற்போது இன்ஸடாகிராமில் இந்த நானோ பனானா 3டி இமேஜ் டிரெண்டாகி வருகிறது.
இதையும் படிக்க : கூகுள் குரோமில் இந்த ஷார்ட்கட் பற்றி தெரியுமா? இனி எல்லா வேலையும் ஈஸியா பண்ணலாம்




நானோ பனானாவை எப்படி பயன்படுத்துவது?
- உங்கள் கூகுள் குரோம் புரௌசரில் Google AI Studio என தேடவும்.
- பின்னர் Try Gemini என்பதை கிளிக் செய்யவும்.
- வலது பக்கத்தில் Gemini 2.5 Flash Image என்பதைத் தேர்வு செய்து கூகுள் அக்கவுண்ட்டில் லாகின் செய்யவும்.
- Terms and Conditons விவரங்களை முழுமையாக படித்து பின்னர் அதனை ஏற்கவும்.
- பின்னர் + என்ற ஐகானை கிளிக் செய்து Upload Image என்பதைத் தேர்வு செய்யவும்.
- உங்கள் போட்டோ, செல்ஃபி, நாய், பூனை போன்ற செல்லப்பிராணி அல்லது இயற்கை காட்சி புகைப்படம் எதுவாக இருந்தாலும் அப்லோட் செய்யவும்.
- Chatbox-ல் கொடுக்கப்பட்ட சிறப்பு பிராம்ட்டை கொடுத்து ரன் அழுத்தவும்.
- சில விநாடிகளில் உங்கள் புகைப்படம் 3டி மாடல் போல மாறும்.
- பின்னர் அதனை டவுன்லோடு செய்து இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் பகிரலாம்.
இதையும் படிக்க : ஜிமெயிலின் இந்த 5 சீக்ரெட்ஸ் பற்றி தெரியுமா? உங்கள் வேலை சில நிமிடங்களில் முடியும்
நானோ பனானாவின் சிறப்பு
இதற்காக உங்களுக்கு டிசைனிங் பற்றிய அறிவு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான பிராம்ப்டை சரியாக கொடுத்தால் மட்டும் போதும். உங்கள் 3டி மாடலை உருவாக்க முடியும். மேலும் இதற்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. முற்றிலும் இலவசமாக பயன்படுத்த முடியும். இதன் மூலம் ஒரு தத்தரூபமான 3டி மாடலை உருவாக்க முடியும்.