Apple iPhone 17 : எல்லாமே புதுசு.. அட்டகாசமாக அறிமுகமான ஐபோன் 17 சீரீஸ்.. தட்டி தூக்கிய ஆப்பிள்!
Apple iPhone 17 Series Launched | ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

உலகமே ஆவளுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் (Apple iPhone 17 Series Smartphones) (நேற்று (செப்டம்பர் 09, 2025) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த சீரீஸில் வழக்கமாக அறிமுகம் செய்யப்படும் ஐபோன் 17 (iPhone 17), ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த முறை புதியதாக ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 17 சீரிஸின் அறிமுகத்தில் இது மிகவும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகமான ஐபோன் 17 சீரீஸ்
ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே அதன் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்தது. அந்த வகையில் நேற்று (செப்டம்பர் 09, 2025) ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆப்பிள் ஐபோன் 17
இந்த ஆப்பிள் ஐபோன் 17 ஸ்மார்ட்போன் பல்வேறு மாற்றங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 48 மெகாபிக்சல் கலப்பு டூயல் கேமரா அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக ஆப்பிள் செல்ஃபி கேமராவில் செண்டர் ஸ்டேஜ் (Center Stage) அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வீடியோ மற்றும் புகைப்படங்களை சரியாக பிரேமிற்குள் வைத்து எடுக்க முடியும். இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.82,900 ஆக உள்ளது.




இதையும் படிங்க : இவ்வளவு குறைந்த விலையில் இத்தனை சிறப்பு அம்சங்களா.. வெறும் ரூ.6,099-க்கு அறிமுகமான லாவா யுவா ஸ்மார்ட் 2!
ஐபோன் 17 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ்
இந்த முறை ப்ரோ மாடல்களும் அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களின் தொடக்க ஸ்டோரேஜ் 256 ஜிபி ஆக உள்ளது. ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி ஆகிய வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் 2 டிபி வரை உள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் A19 ப்ரோ சிப் அம்சத்தை கொண்டுள்ளது.
இதையும் படிங்க : Realem 15 T : 7,000 mAh பேட்டரி.. 128 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது ரியல்மி 15 டி!
இந்த ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.1,34,900 ஆக உள்ளது. இதேபோல ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.1,49,900 ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கான ப்ரீ ஆர்டர்கள் செப்டம்பர் 12, 2025 முதல் தொடங்கும் நிலையில், செப்டம்பர் 19, 2025 முதல் அவற்றின் விற்பனை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.