Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஐபோன் ஏர் முதல் ஏர்பாட்ஸ் புரோ 3 வரை… ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 5 சிறப்பான விஷயங்கள் – அப்படி என்ன ஸ்பெஷல்?

Apple Event Highlights : ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 9, 2025 அன்று நடைபெற்ற Awe Dropping நிகழ்ச்சியில் ஐபோன் ஏர் முதல் .ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 பல ஆச்சரியமளிக்கும் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்

ஐபோன் ஏர் முதல் ஏர்பாட்ஸ் புரோ 3 வரை… ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 5 சிறப்பான விஷயங்கள் – அப்படி என்ன ஸ்பெஷல்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 10 Sep 2025 20:19 PM IST

கடந்த செப்டம்பர் 9, 2025 அன்று நடைபெற்ற ஆப்பிள் (Apple) நிறுவனம் நடத்திய Awe Dropping நிகழ்ச்சியில், தொழில்நுட்ப உலகம் ஆச்சரியப்படத்தக்க பல புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் முக்கியமாக அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த ஆப்பிளின் மிக மெல்லிய ஐபோன் ஏர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் அதற்கு அப்பாற்பட்டு ஏர்பாட்ஸ் புரோ 3, ஐபோன் 17 புரோ மேக்ஸ் என பல புதுமையான அம்சங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த அம்சங்கள் ஸ்மார்ட்போன் உலகையும் நேரடியாக கவன ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. இதில் 5 முக்கிய அம்சங்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 5 அம்சங்கள்

1.ஐபோன் ஏர்

ஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளியிட்ட ஐபோன்களில் மிக மெல்லி ஐபோன் ஏரை அறிமுகப்படுத்தியுள்ளது. மிக மெலிதான போனாக மட்டுமல்லாமல் மிக வலிமையான ஐபோன் என்றும் இது கருதப்படுகிறது. குறிப்பாக Bendgate பிரச்னைகளை சரி செய்யும் வகையில் இந்த ஐபோன் ஏர் கூடுதல் வலிமையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் மிக உயர்ந்த பிரசாசர் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : மெல்லிய தோற்றம்.. அட்டகாசமான அம்சங்கள்.. முற்றிலும் புதுமையான ஐபோன் 17 ஏர் அறிமுகம்!

2.ஏர்பாட்ஸ் புரோ 3

ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஏர்பாட்ஸ் புரோ 3 இன் முக்கிய மாற்றமாக அதில் பயன்படுத்தப்பட்டுள்ள இயர் டிப்ஸ் முன்பைப் போல சிலிகான் மட்டுமல்லாமல் தற்போது சிலிகானுடன் ஃபோம் (Foam) இணைந்துள்ளது. இதனால் நாய்ஸ் கேன்சலைசேஷன் வசதி மேலும் மேம்பட்டதாக இருக்கும். ஆனால் இதனை பயனர்கள் புரிந்துகொள்ள சில காலம் எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3.ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11

புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மற்றும் அல்ட்ரா 3 மாடல்களில் இரத்த அழுத்தத்தை அறிந்து கொள்ளும் பிளட் பிரசர் மானிட்டரிங் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர் சேர்ந்து இயங்கும் அம்சம். இதில் நம் இரத்த அழுத்தம் குறித்து தொடர்ந்து 30 நாட்கள் வரை பரிசோதித்து அந்த டேட்டாவை மெஷின் லேர்னிங் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை கண்டறிகிறது. இந்த வசதி பழைய மாடல்களில் கிடைக்காது.

இதையும் படிக்க : Flipkart Big Billion Days: மாபெரும் சலுகை விற்பனை – ஐபோன் 16க்கு குவியும் ஆஃபர்கள்!

4.ஐபோன் 17 புரோ

புதிய ஐபோன் 17 புரோ மாடல்களில் வேப்பர் சாம்பர் கூலிங் சிஸ்டம் (Vapour Chamber Cooling System) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 சதவிகிதம் அதிக செயல் திறன், நீண்ட நேரம் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. குறிப்பாக A19 Pro Chip நடுவில் அமைக்கப்பட்டு, அதிக வெப்பத்தை அலுமினியம் கட்டுப்படுத்தி, கேமிங் போன்ற அதிக செயல்திறனில் இயல்பாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

5. லைவ் டிரான்ஸ்லேசன்

புதிய ஏர்பாட்ஸ் புரோவில் அறிமுகமான லைவ் டிரான்ஸ்லேசன் வசதி சிக்கலான மொழிகளையும் மிகவும் எளிதில் கையாளும். முக்கியமாக, ஆஃப்லைனிலும் இயங்கும். அதாவது, போன் பாக்கெட்டில் இருந்தால் கூட, நம் பேசுவதன் அர்த்தத்தை புரிந்துகொண்டு மொழிபெயர்க்கும் திறன் கொண்டது.