Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்த 8 விஷயங்களை கவனிக்காம லேப்டாப் வாங்காதீங்க! விவரம் இதோ

Choose the Right Laptop : இன்றைய டிஜிட்டல் யுகத்தில் லேப்டாப் மிகவும் அத்தியாவசியமான பொருள். எனவே லேப்டாப்பை மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுப்பது அவசியம். இந்த கட்டுரையில் லேப்டாப் வாங்கும் போது கவனிக்க வேண்டிய 8 விஷயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்த 8 விஷயங்களை கவனிக்காம லேப்டாப் வாங்காதீங்க! விவரம் இதோ
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Sep 2025 21:07 PM IST

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், வேலை, படிப்பு, பொழுதுபோக்கு என வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களிலும் லேப்டாப் (Laptop) ஒரு அத்தியாவசியமான கருவியாக மாறிவிட்டது.  ஆனால் சந்தையில் பல்வேறு வகை மற்றும் விலைகளில் லேப்டாப்கள் கிடைப்பதால், எது உங்களுக்கு பொருத்தமானது என்பதை தீர்மானிக்க சற்று சிரமமாக இருக்கும்.  நம் தேவைகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப லேப்டாப்பை தேர்ந்தெடுப்பது அவசியம். குறிப்பாக பிராசசர், ஸ்டோரேஜ், பேட்டரி லைஃப் என அனைத்து விஷயங்களையும் கவனிப்பது அவசியம்.  இந்த கட்டுரையில் லேப்டாப் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 8 முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். குறிப்பாக பட்ஜெட்டை கருத்தில் கொள்வது மிகவும் அவசியம்.

லேப்டாப் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 8 விஷயங்கள்

1.  பிராசசர்

லேப்டாப்பின் பிரெயின் என்று அழைக்கப்படும் பிராசசர் தான் அதன் செயல் திறனை முடிவு செய்கிறது. இன்டெல், ஏஎம்டி போன்ற நிறுவனங்களின் புதிய ஜெனரேஷன் சிபியூகள் அதிக வேகமும் லேப்டாப் இயங்க அதிக செயல்திறனை வழங்குகிறது. கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற கனரக வேலைகளுக்கு தவறாமல் ஒரு வலுவான சிபியூ தேவைப்படும்.

2.  ரேம்

ஒரே நேரத்தில் பல சாஃப்ட்வேர் அல்லது செயலிகளை பயன்படுத்தும் போது லேப்டாப் மெதுவாக இயங்காமல் இருக்க ரேம் மிகவும் முக்கியம். சாதாரண பயன்பாட்டிற்கு 8ஜிபி ரேம் போதுமானது. ஆனால் டிசைனிங், எடிட்டிங் போன்றவற்றிற்கு 16ஜிபி அல்லது அதற்கு மேல் இருப்பது சிறந்தது.

இதையும் படிக்க : ஆண்ட்ராய்டு போன் மெதுவாக இயங்குகிறதா? இந்த 7 எளிய டிரிக்ஸை டிரை பண்ணுங்க

3. ஸ்டோரேஜ்

ஹார்ட் டிஸ்க் அதிக இடத்தை ஸ்டோரேஜிற்கு வழங்கும் ஆனால் சாலிட் ஸ்டேட் டிரைவ் (Solid State Drive) மிக வேகமாக இயங்கும். லேப்டாப் ஆன் ஆகும் வேகம், சாஃப்ட்வேர்கள் வேகம் ஆகியற்றிற்கு எஸ்எஸ்டி பெரும் பங்கு வகிக்கிறது. அதிக வேகத்திற்கு எஸ்எஸ்டி, அதிக சேமிப்பிற்கு ஹார்ட் டிஸ்க் என உங்கள் தேவைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கலாம்.

4. டிஸ்பிளே

லேப்டாப் திரையின் அளவு மற்றும் ரிசெல்யூஷன் ஆகியவை உங்கள் பார்வை அனுபவத்தை தீர்மாணிக்கும் . அதே போல அதிகமாக பயணிப்பவர்கள் சிறிய, எடை குறைந்த, சிறிய திரையுடன் கூடிய லேப்டாப்பை தேர்வு செய்வது சிறந்தது.

5. பேட்டரி லைஃப்

மின் இணைப்பின்றி லேப்டாப்பை எவ்வளவு மணி நேரம் பயன்படுத்த முடியும் என்பதை கவனிக்க வேண்டும். அடிக்கடி வெளியே பயன்படுத்துபவர்கள் குறைந்தபட்சம் 5 முதல் 6 மணி நேரம் பேட்டரி பவர் இருக்க கூடிய லேப்டாப்களை தேர்ந்தெடுப்பது அவசியம்

6. கனெக்டிவிட்டி

யுஎஸ்பி 3.0, யுஎஸ்பி-சி, எச்டிஎம்ஐ தண்டர்போல்ட் போன்ற போர்டுகள் லேப்டாப்பில் இருக்கிறதா என சரிபார்க்க வேண்டும். ஹார்ட்டிஸ்க், மானிட்டர், பிரின்ட்ர் போன்றவற்றை இணைக்க இது முக்கியம். வைஃபை, புளூடூத் போன்ற கனெக்டிவிட்டி வசதிகளும் அவசியம்.

இதையும் படிக்க : கழிவறையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நபரா நீங்கள்?.. இந்த பாதிப்பு வர 46% வாய்ப்பு.. மருத்துவர்கள் எச்சரிக்கை!

7. ஆபரேட்டிங் சிஸ்டம்

விண்டோஸ், மேக், லினக்ஸ், குரோம் ஓஎஸ் என பல்வேறு வகை ஓஎஸ்கள் சந்தையில் கிடைக்கின்றன. உங்கள் வேலை மற்றும் சாஃப்ட்வேர்களின் தேவையை பொறுத்து ஆபரேட்டிங் சிஸ்டமை தேர்வு செய்யலாம். பொதுவாக விண்டோஸ் அதிகமான செயலிகளை சப்போர்ட் செய்யும்.

8. பில்ட் குவாலிட்டி

லேப்டாப் உறுதியான பில்ட் குவாலிட்டியுடன் இருக்க வேண்டும். கீபோர்டு, டச் பேட் ஆகியவை பயன்படுத்த எளிதானதாக இருக்க வேண்டும். மேலும் வழக்கமான லேப்டாப் வேண்டுமா அல்லது 360 டிகிரி மடிக்கக் கூடிய 2 in 1 லேப்டாப் வேண்டுமா என்பதை உங்கள் பயன்பாட்டுக்கு ஏற்ப தீர்மானிக்க வேண்டும்.