Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஸ்மார்ட் வாட்ச்களுக்கு 56% தள்ளுபடி.. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் கொட்டிக்கிடக்கும் சலுகைகள்!

Best Deals for Smart Watches | பிளிப்கார்ட் நிறுவனம் தனது பிக் பில்லியன் டேஸ் சேல் 2025-ஐ அறிவித்துள்ளது. இந்த சேலில் முன்னணி பிராண்டுகளின் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு 56 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க உள்ளதாக பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்மார்ட் வாட்ச்களுக்கு 56% தள்ளுபடி.. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் கொட்டிக்கிடக்கும் சலுகைகள்!
ஸ்மார்ட் வாட்ச்கள்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Sep 2025 19:22 PM IST

பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனம் தனது பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலை (Flipkart Big Billion Days Sale) அறிவித்துள்ளது. இந்த சேல் இன்னும் ஒருசில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், எந்த எந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளது என்பது குறித்து பிளிப்கார்ட் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் எந்த எந்த ஸ்மார்ட் வாட்ச்களுக்கு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விரைவில் வரும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேச் சேல்

பிளிப்கார்ட் நிறுவனம் தனது பிக் பில்லியன் டேஸ் சேலை செப்டம்பர் 23, 2025 அன்று அறிவித்துள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள், வாட்ச்கள், மின்சாதன பொருட்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக சாம்சங், ஆப்பிள் உள்ளிட்ட ஸ்மார்ட்வாட்சகளுக்கு சுமார் 56 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க உள்ளதாக கூறியுள்ளது. இதன் மூலம் பல முன்னணி பிராண்டுகளின் ஸ்மார்ட் வாட்ச்களை மிக குறைந்த விலையில் வாங்க முடியும்.

இதையும் படிங்க : Nothing Phone 3 ரூ.79,999 இல்ல வெறும் ரூ.34,999 மட்டும் தான்.. பிளிப்கார்ட் அதிரடி சலுகை!

எந்த எந்த வாட்ச்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 7

இந்த ஸ்மார்ட் வாட்ச்சில் அதிநவீன உடல்நலனை கண்காணிக்கும் அம்சங்கள் உள்ளன. ஸ்டைல் மற்றும் பயன்பாட்டிலும் இது சிறந்து விளங்குகிறது. இதய துடிப்பு கணிப்பு, ரத்த கொதிப்பு, இசிஜி ஆகியவற்றையும் இந்த ஸ்மார்ட் வாட்சை கொண்டு கண்காணிக்க முடியும்.

கேலக்ஸி வாட்ச் 6 கிளாசிக்

இந்த ஸ்மார்ட் வாட்ச்சில் போன் கால்கள், குறுஞ்செய்தி மற்றும் ஸ்ட்ரீமிங் செய்துக்கொள்ள முடியும். இந்த ஸ்மார்ட் வாட்ச் அனைத்து உடைகளுக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச்சில் 40 மணி நேரம் வரை சார்ஜ் நீடிக்கும்.

இதையும் படிங்க : iPhone 16 Pro : இதவிட குறைந்த விலையில் வாங்கவே முடியாது.. ரூ.1.1 லட்சத்துக்கான ஐபோன் 16 ப்ரோவை வெறும் ரூ.69,000-க்கு தரும் பிளிப்கார்ட்!

கூகுள் பிக்சல் வாட்ச் 2

இந்த ஸ்மார்ட் வாட்ச் உடல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் மன அழுத்தத்தை கண்காணிக்கவும், தூக்கத்தை கண்காணிக்கவும் பயன்படுகிறது. இதுதவிர ஒருவரின் ஆக்சிஜன் அளவு, இதய துடிப்பு ஆகியவற்றையும் கண்காணிக்க இந்த ஸ்மார்ட் வாட்ச் பயன்படுகிறது.

இத்தகைய சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் பிளிப்கார்ட் சேலில் சுமார் 56 சதவீதம் வரை தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.