Nothing Phone 3 ரூ.79,999 இல்ல வெறும் ரூ.34,999 மட்டும் தான்.. பிளிப்கார்ட் அதிரடி சலுகை!
Nothing Phone 3 Gets Huge Discount | பிளிப்கார்ட் நிறுவனம் தனது பிக் பில்லியன் டேஸ் சேலை அறிவித்துள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் நத்தின் போன் 3-க்கு கிடைக்கும் சலுகை குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் டேஸ் சேல் ( Flipkart Big Billion Days Sale) அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 23, 2025 அன்று இந்த சேல் தொடங்க உள்ள நிலையில், எந்த எந்த மாடல் ஸ்மார்ட்போனுக்கு எவ்வளவு சலுகை வழங்கப்படும் என்பது குறித்து அந்த நிறுவனம் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் நத்திங் நிறுவனத்தின் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் (Nothing Phone 3 Smartphone) மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
செப்டம்பர் 23-ல் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்
பிளிப்கார்ட் நிறுவனம் தனது பிக் பில்லியன் டேஸ் சேலை அறிவித்துள்ளது. இந்த சேல் செப்டம்பர் 23, 2025 அன்று தொடங்க உள்ள நிலையில், அதில் எந்த எந்த மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளன என்பது குறித்து அந்த நிறுவனம் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நத்தின் போன் 3, நத்தின் போன் 3ஏ (Nothing Phone 3a) மற்றும் போன் 3 ஏ (Phone 3a) ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன்களை இதுவரை இல்லாத குறைந்த விலையில் வாங்கிக்கொள்ள பிளிப்கார்ட் பல அசத்தல் சலுகைகளை வழங்கியுள்ளது.
இதையும் படிங்க : Apple iPhone 17 : அறிமுகமானது ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்.. வேரியண்ட் வாரியாக விலை பட்டியல் இதோ!




நத்திங் போன் 3-க்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்
பிளிப்கார்ட் நிறுவனம் தனது பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் நத்தின் போன் 3 ஸ்மார்ட்போனை வெறும் ரூ.34,999-க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.79,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ரூ.45,000 வரை தள்ளுபடி வழங்க உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதேபோல நத்தின் போன் 3 ஏ (Nothing Phone 3a) மற்றும் நத்தின் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கும் அதிரடி தள்ளுபடி வழங்கப்பட உள்ளதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஸ்மார்ட் வாட்ச்சிற்கு பதிலாக ஸ்மார்ட் பேண்டை தேர்வு செய்யும் பிரபலங்கள் – காரணம் என்ன தெரியுமா?
இந்த நத்திங் போன் 3 ஏ ஸ்மார்ட்போன் ரூ.24,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அது பிளிப்கார்ட் சேலில் வெறும் ரூ.20,999-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதேபோல, ரூ.29,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் வெறும் ரூ.24,999-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.4,000 மற்றும் ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.