Apple iPhone 17 : அறிமுகமானது ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்.. வேரியண்ட் வாரியாக விலை பட்டியல் இதோ!
Apple iPhone 17 Series Smartphones Price in India | ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன. இதில் ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களின் விலை குறித்து பார்க்கலாம்.

உலகம் முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் (Apple iPhone 17 Series Smartphones) 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன. இந்த சீரிசில் ஐபோன் 17 (iPhone 17), ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro), ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) மற்றும் ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air) ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஆப்பிள் ஐபோன்களின் விலை மற்றும் அது விற்பனைக்கு வரும் தேதி ஆகியவை குறித்து விரிவாக பார்க்கலாம்.
அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் – விலை பட்டியல்
ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன்களின் விலையை வேரியண்ட் வாரியாக பார்க்கலாம்.
இந்தியாவில் ஐபோன் 17 ஸ்மார்ட்போன் விலை
- 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 17 ஸ்மார்ட்போன் ரூ.82,900-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
- 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 17 ஸ்மார்ட்போன் ரூ.1,02,900-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன் விலை
- 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன் ரூ.1,19,900-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
- 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன் ரூ.1,39,900-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
- 1டிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன் ரூ.1,59,900-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க : Apple iPhone 17 : எல்லாமே புதுசு.. அட்டகாசமாக அறிமுகமான ஐபோன் 17 சீரீஸ்.. தட்டி தூக்கிய ஆப்பிள்!




இந்தியாவில் ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை
- 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.1,34,900-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
- 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.1,54,900-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
- 1டிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.1,74,900-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க : ஏன் மக்கள் ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனுக்கு மாறுகிறார்கள்? – 8 முக்கிய காரணங்கள்
இந்தியாவில் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் விலை
- 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.1,49,900-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
- 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.1,69,900-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
- 1டிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.1,89,900-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
- 2டிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.2,29,900-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
மேற்குறிப்பிட்ட இந்த ஸ்மார்ட்போன்களுக்கான ப்ரீ புக்கிங் செப்டம்பர் 12, 2025 முதல் தொடங்க உள்ளது. இதேபோல செப்டம்பர் 19, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வர உள்ளது.