Festival Scam : பண்டிகை கால மோசடிகள்.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?
How to Beware of Festival Scam | இந்தியாவில் பண்டிகை காலங்களின் போது அதிக பொருட்களை வாங்குவது பொதுமக்கள் மத்தியில் வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், பண்டிகை கால மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியுள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வரிசை கட்டி நின்றுக்கொண்டு இருக்கின்றன. இந்த பண்டிகை காலங்களின் போது பொதுமக்கள் புத்தாடைகள், நகைகள், வாகனங்கள் வாங்குவது வழக்கம். இந்த காலக்கட்டத்தை பயன்படுத்திக்கொள்ளும் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு பல அட்டகாசமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்குகின்றன. இந்த நிலையில், பண்டிகை கால மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வெண்டியது கட்டாயமாக உள்ளது.
பண்டிகை காலங்களின் போது அதிக சலுகைகளை வழங்கும் நிறுவனங்கள்
இந்திய பொதுமக்கள் மத்தியில் பண்டிகை காலங்களின் போது புதிய பொருட்களை வாங்கும் பழக்கம் உள்ளது. பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களில் இருந்து போனஸ் பெறுவர். இந்த சூழலை பயன்படுத்திக்கொண்டு பல நிறுவனங்கள் தங்களின் பொருட்கள் அசத்தல் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்கும். 70 சதவீதம் வரை தள்ளுபடி, பழை பொருட்களுக்கு புதிய பொருட்கள், வாடிக்கையாளர்களில் ஒருவரை தேர்வு செய்து பரிசு வழங்குவது என பல வகையான சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்.
இதையும் படிங்க : வாட்ஸ்அப் Vs அரட்டை.. இரண்டில் எது பெஸ்ட்.. என்ன என்ன சிறப்பு அம்சங்கள் உள்ளன!




பண்டிகை கால சலுகை போர்வைக்குள் ஒளிந்திருக்கும் மோசடிகள்
இவ்வாறு பண்டிகை காலங்களில் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை பயன்படுத்தி பொதுமக்கள் பொருட்களை வாங்கும் நிலையில், அதனை பயன்படுத்திக்கொள்ளும் மோசடி கும்பல்கள் அதன் மூலம் மோசடிகளை அரங்கேற்றி பொதுமக்களிடம் இருந்து பணத்தை பறிக்கின்றன இதன் காரணமாக பண்டிகை காலங்கள் மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க : இனி விமானத்தில் பயணம் செய்யும்போது பவர் பேங்க் பயன்படுத்தக்கூடாது.. எமிரேட்ஸ் அதிரடி உத்தரவு!
பண்டிகை கால மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
போன் கால், மின்னஞசல், குறுஞ்செய்தி என பல வடிவில் மோசடிக்காரர்கள் மோசடி செய்கின்றனர். இந்த நிலையில், அவற்றை குறித்து பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
- உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் நம்பகத்தன்மையுடையதா என்பதை சோதனை செய்யுங்கள்.
- எந்த நிறுவனத்திடம் இருந்து செய்தி வந்துள்ளது, அந்த நிறுவனம் அத்தகைய சலுகைகளை வழங்கி வருகிறதா என்பதை சோதனை செய்யுங்கள்.
- பொருட்களை வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மூலம் ஆர்டர் செய்யாமல் அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டும் ஆர்டர் செய்யுங்கள்.
- முடிந்த அளவுக்கு ஆன்லைனில் பணம் செலுத்தாமல் பொருளை கையில் வாங்கிய பிறகு பணத்தை செலுத்தும் Cash On Delivery அம்சத்தை தேர்வு செய்யுங்கள்.
மேற்குறிப்பிட்ட இந்த அம்சங்களை உறுதி செய்த பிறகு பண்டிகை கால சலுகைகளில் பொருட்களை வாங்குவது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.