Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வாட்ஸ்அப் Vs அரட்டை.. இரண்டில் எது பெஸ்ட்.. என்ன என்ன சிறப்பு அம்சங்கள் உள்ளன!

Arattai Overtakes WhatsApp in India | மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை போலவே சோஹோ நிறுவனத்தின் அரட்டை செயலி உள்ளது. இது 2021 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும், இந்த செயலி தற்போது வாட்ஸ்அப் செயலியை முந்தியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

வாட்ஸ்அப் Vs அரட்டை.. இரண்டில் எது பெஸ்ட்.. என்ன என்ன சிறப்பு அம்சங்கள் உள்ளன!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Oct 2025 23:11 PM IST

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) இருந்த நிலையில், தற்போது அதனை சோஹோ (Zoho) நிறுவனத்தின் அரட்டை (Arattai) முந்தியுள்ளது. ஏற்கனவே வாட்ஸ்அப் உள்ளிட்ட வேறு சில செயலிகளை பயன்படுத்திக்கொண்டு இருந்த பொதுமக்கள் ஏராளமானோர் தற்போது அரட்டை செயலிக்கு மாறியுள்ளனர். இந்த நிலையில், வாட்ஸ்அப் செயலிக்கும் அரட்டை செயலிக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப் செயலியை முந்திய அரட்டை செயலி

வாட்ஸ்அப் செயலி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ள நிலையில், இந்தியாவிலும் அதற்கு அதிக பயனர்கள் இருந்தனர். இதன் காரணமாக இந்தியர்களால் அதிகம் பயன்படுத்தும் செயலியாக அது இருந்தது. இந்த நிலையில் தான் அரட்டை செயலி முதல் இடத்தை பிடித்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர்கள் பலர் இந்த செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியிலும் இந்த செயலி பிரபலமடைந்துள்ளது. ஆப் ஸ்டோரில் அரட்டை செயலி முதல் இடத்தில் உள்ள நிலையில், வாட்ஸ்அப் 5வது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க : இனி Instagram, Facebook செயலிகளை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும்.. இல்லையென்றால் இதுதான் நிலை.. மெட்டா திட்டவட்டம்!

அரட்டை செயலிக்கும் வாட்ஸ்அப் செயலிக்கும் என்ன வித்தியாசம்?

  • அரட்டை, வாட்ஸ்அப் ஆகிய இரண்டு செயலிகளுமே ஒரே மாதிரியான மெசேஜிங் அம்சத்தை கொண்டுள்ளன.
  • இரண்டு செயலிகளிலும் குறுஞ்செய்தி அனுப்புவது, புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை பகிர்வது, வாட்ஸ் மெசேஜ், வாய்ஸ் கால், வீடியோ கால் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.
  • இரண்டு செயலிகளையும் ஒப்பிடுகையில் அரட்டை செயலி தகவல் பரிமாற்றத்திற்கான அதிக அம்சங்களை கொண்டுள்ளது.
  • அரட்டை செயலியை ஆண்ட்ராய்டு டிவியிலும் பயன்படுத்த முடியும். ஆனால், வாட்ஸ்அப் செயலியில் தற்போது இந்த அம்சம் இல்லை.
  • அரட்டை பயனர்கள் அந்த செயலியை ஒரே நேரத்தில் ஐந்து கருவிகளில் பயன்படுத்த முடியும்.
  • அரட்டை செயலியில் பயனர்களுக்கான தனி இடமும் உள்ளது. அதில் அவர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், தகவல்கள் ஆகியவற்றை சேகரித்து வைத்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : இயர் பட்ஸ்களை இப்படி சுத்தம் செய்யுங்கள்.. பாதுகாப்பாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்!

மேற்குறிப்பிட்டுள்ள இந்த அம்சங்களுடன் ஒப்பிடுகையில் அரட்டை செயலி வாட்ஸ்அப் செயலியை விடவும் சற்றும் அதிகமான அம்சங்களை கொண்டுள்ளது. இந்திய குடிமக்கள் இந்திய பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.