சுவதேசி 4 ஜி சேவையை தொடங்கி வைத்த பிரதமர்.. 26,700 கிராமங்களுக்கு புதியதாக தொலைத்தொடர்பு வசதி கிடைக்கும்!
Swadeshi 4G Network Launched in India | பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுன் வருகிறது. அந்த வகையில் சுவதேசி 4ஜி நெட்வொர்க்கை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று (செப்டம்பர் 27, 2025) தொடங்கி வைத்தார்.

புதுடெல்லி, செப்டம்பர் 28 : உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொலைத்தொடர்பு கருவிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 4ஜி பிஎஸ்என்எல் (BSNL – Bharat Sanchar Nigam Limited) சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) தொடங்கி வைத்துள்ளார். இந்த சேவைக்கு சுதேசி 4 ஜி சேவை (Swadeshi 4G Network) என பெயரிடப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வெள்ளி விழா நேற்று (செப்டம்பர் 27, 2025) கொண்டாடப்பட்ட நிலையில், ஒடிசாவில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சுதேசி 4 ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் 97,500 4ஜி மொபைல் டவர்கள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த மொபைல் டவர்களை அமைக்க அரசு மொத்தமாக ரூ.37,000 கோடி பணத்தை செலவு செய்துள்ளது. அதன்படி, தொலைத்தொடர்புக்கு தேவையான தொலைத்தொடர்பு கருவிகள் உள்நாட்டிலேயே உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. முன்னதாக இந்த பட்டியலில் டென்மார், ஸ்வீடன், தென் கொரியா, சீனா ஆகிய நாடுகள் இருக்கும் நிலையில் தற்போது பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
இதையும் படிங்க : புதிய ஸ்மார்ட்போன் வாங்கபோறீங்களா? இந்த விஷயங்கள் இருக்கா என கவனிங்க!
டிஜிட்டல் இந்தியாவில் தொலைதூர கிராமங்களை இணைக்கும் நோக்கம்
இந்த தொலைத்தொடர்பு அமைப்பு 5ஜி நெட்வொர்க்குக்கு மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவையை உருவாக்க வேண்டும் என்றும், டிஜிட்டல் இந்தியாவில் தொலைதூர கிராமங்களையும் இணைக்க வேண்டும் என்பதனை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்.. அசத்தல் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும் லேப்டாப்கள்!
26,700 கிராமங்களுக்கு புதியதாக தொலைத்தொடர்பு வசதி கிடைக்கும்
பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ள இந்த சுவதேசி 4 ஜி சேவை திட்டத்தில் இதுவரை தொலைத்தொடர்பு இல்லாத 26,700 கிராமங்களுக்கு புதியதாக தொலைத்தொடர்பு சேவை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 20 லட்சம் புதிய சந்தாரர்களுக்கு சேவை அளிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இது இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்ல உதவியாக இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.