பண்டிகை காலத்தில் முறையாக தங்கம் வாங்குவது எப்படி?.. இந்த விஷயங்களை செக் பண்ணுங்க!
Safe Gold Buying Tips | தங்கத்தின் விலை நாளுக்கு நாள் மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக போலி நகைகளின் படையெடுப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பண்டிகை காலத்தில் நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தங்கம் விலை (Gold Price) வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது. இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில், தங்கத்தின் விலை மேலும் மேலும் உயர்வை சந்தித்து வருகிறது. இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கத்தை வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதனையும் மீறி பொதுமக்கள் தங்கத்தை வாங்கும் பட்சத்தில், அதிக விலை உயர்வு காரணமாக போலி தங்க நகை விற்பனையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பண்டிகை காலத்தில் பாதுகாப்பான முறையில் தங்கம் வாங்குவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொதுமக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ள தங்கம்
தங்கம் என்பது இந்திய பொதுமக்களின் வாழ்வாதாரத்திலும், கலாச்சாரத்திலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. இதன் காரணமாக தங்கம் எவ்வளவு விலை உயர்ந்தாலும், அதன் மீதான காதல் மக்களுக்கு குறைந்தபாடில்லை. எனவே பெரிய எடையில் தங்கத்தை வாங்க முடியவில்லை என்றாலும் சிறிய அளவிலாவது அவர்கள் தங்கத்தை வாங்குகின்றனர். ஆனால், தற்போது தங்கத்தின் விலை உச்சத்தில் உள்ள நிலையில், அதில் பல விதமான மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் இருந்து பாதுகாப்பாக தங்கம் எப்படி வாங்குவது என்பது குறித்து பார்க்கலாம்.
இதையும் படிங்க : FD Schemes : 7.15 சதவீதம் வரை வட்டி.. அதிக பலன்களுடன் கூடிய எஸ்பிஐ-ன் எப்டி திட்டங்கள்!
தங்கம் வாங்கும்போது கவனிக்கவேண்டிய முக்கிய விஷயங்கள்
தங்கம் வாங்கும்போது ஒரு சில விஷயங்களை கட்டாயம் கவனிக்க வேண்டும். இல்லையென்றால் தேவையற்ற சிக்கல்களில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படும்.
சரியான விற்பனையாளரை தேர்வு செய்வது
தங்க நகை வாங்குவதற்கு முன்னதாக நாம் யாரிடம் இருந்து தங்கம் வாங்குகிறோம் என்பதை கவனிக்க வேண்டும். அதாவது தங்கம் வாங்கும் இடம் தரமானதா, மோசடிகள் அற்ற விற்பனையகமா என்பது குறித்து சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க : யுபிஐ சேவை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு வரை – அக்டோபர் 1 முதல் வரும் மிகப்பெரிய மாற்றங்கள்
ஹால்மார்க் முத்திரைகளை பரிசோதனை செய்ய வேண்டும்
தங்கம் தரமானது என்பதை அதன் ஹாலமார்க் முத்திரைகள் தான் உறுதி செய்யும். எனவே நீங்கள் தங்கம் வாங்குவதற்கு முன்னதாக அதில் ஹால்மார்க் முத்திரை உள்ளதா என்பது குறித்து சோதனை செய்யுங்கள். முத்திரைகள் இல்லாத தங்க நகைகளை வாங்குவது விலை கொடுத்து அபாயத்தை வாங்குவதற்கு சமமாகும். எனவே ஹால்மார்க் முத்திரைகள் குறித்து மிக தெளிவாகவும் கவனமாகவும் இருப்பது மிக முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.