Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

FD Schemes : 7.15 சதவீதம் வரை வட்டி.. அதிக பலன்களுடன் கூடிய எஸ்பிஐ-ன் எப்டி திட்டங்கள்!

SBI Special Fixed Deposit Schemes | இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் பல வகையான நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் எஸ்பிஐ செயல்படுத்தும் சிறப்பு நிலையான வைப்பு நிதி திட்டங்கள் மற்றும் அதன் வட்டி விகிதங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

FD Schemes : 7.15 சதவீதம் வரை வட்டி.. அதிக பலன்களுடன் கூடிய எஸ்பிஐ-ன் எப்டி திட்டங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Sep 2025 23:02 PM IST

சாமானிய மக்களின் சிறந்த சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டமாக உள்ளது நிலையான வைப்பு நிதி திட்டம் (FD – Fixed Deposit Scheme) தான். இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகளில் இந்த திட்டங்கள் செயல்பட்டுத்தப்படுகிறது. இந்த நிலையில் எஸ்பிஐ (SBI – State Bank Of India) வங்கி சிறந்த வட்டியுடன் கூடிய சிறந்த நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், எஸ்பிஐ வங்கியின் சிறப்பு நிலையான வைப்பு நிதி திட்டங்கள் மற்றும் அதற்கான வட்டி விகிதங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அம்ரித் விரிஷ்டி 444 நாட்களுக்கான திட்டம்

எஸ்பிஐ வங்கி வழங்கும் சிறந்த நிலையான வைப்பு நிதி திட்டங்களில் ஒன்றுதான் அம்ரித் விரிஷ்டி 444 (Amrit Vrishti 444)  நாட்களுக்கான எப்டி திட்டம். இந்த திட்டத்தின் மொத்த கால அளவு 444 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 6.60 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், மூத்த குடிமக்களுக்கு 7.10 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.5 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால் திட்டத்தின் முடிவில் வட்டியாக மட்டுமே ரூ.42,994 கிடைக்கும்.

இதையும் படிங்க : சில்வர் SIP என்றால் என்ன? தங்கத்தை விட வெள்ளியில் முதலீடு செய்வது சிறந்ததா?

கிரீன் ருப்பீ டெர்ம் டெபாசிட்

எஸ்பிஐ வங்கியின் இந்த கிரீன் ருப்பீ டெர்ம் டெபாசிட் (Green Rupee Term Deposit) திட்டம் அதிக அளவு முதலீடு செய்யும் நபர்களுக்கான திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தில் ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டம் 1111 நாட்கள், 1777 நாட்கள் மற்றும் 2222 நாட்கள் என பல கால அளவீடுகளை கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 5.95 முதல் 6.45 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் நிலையில், மூத்த குடிமக்களுக்கு 6.70 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : UPI : யுபிஐ-ல் நவம்பர் 3 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன தெரியுமா?