UPI : யுபிஐ-ல் நவம்பர் 3 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன தெரியுமா?
UPI Payment Changes 2025 | இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் யுபிஐ பண பரிவர்த்தனை செய்யும் நிலையில், பயனர்களின் நலனுக்கான அதில் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் நவம்பர் 03, 2025 முதல் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் யுபிஐ (UPI – Unified Payment Interface) செயலிகளை பயன்படுத்தி தங்களது அன்றாட பண பரிவர்த்தனைகளை (Money Transaction) மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பயனர்கள் மிக எளிதாக சேவைகளை பெறும் வகையில் யுபிஐ-ல் அவ்வப்போது சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் தற்போது நவம்பர் 3, 2025 முதல் யுபிஐ-ல் சில புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளன. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
யுபிஐ-ல் அமலுக்கு வர உள்ள புதிய விதிகள்
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் யுபிஐ சேயலிகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வரும் நிலையில், நவம்பர் 03, 2025 முதல் அதில் சில புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளன. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI – National Payment Corporation of India) அறிவித்துள்ளது. இந்த புதிய மாற்றங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தக பரிவர்த்தனைகளை மேலும் விரைவானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : ஆண்டுக்கு வெறும் ரூ.565 செலுத்தினால் போதும்.. ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெறலாம்!




யுபிஐ-ல் வரவுள்ள புதிய செட்டில்மெண்ட் சுழற்சிகள்
நவம்பர் 3, 2025 முதல் வரவுள்ள புதிய விதிகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே தினமும் நடைபெறும் 10 சுழற்சிகளில் கையாளப்படும். இதுதவிர சர்ச்சைக்குறிய பரிவர்த்தனைகளுக்கு இரண்டு புதிய சுழற்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள்
- சைக்கிள் 1 : நள்ளிரவு 9 மணி முதல் நள்ளிரவு வரை
- சைக்கிள் 2 : நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை
- சைக்கிள் 3 : அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை
- சைக்கிள் 4 : காலை 7 மணி முதல் 9 மணி வரை
- சைக்கிள் 5 : காலை 9 மணி முதல் 11 மணி வரை
- சைக்கிள் 6 : காலை 11 மணி முதல் மதியர் 1 மணி வரை
- சைக்கிள் 7 : மதியம் 1 மணி முதல் 3 மணி வரை
- சைக்கிள் 8 : மாலை 3 மணி முதல் 5 மணி வரை
- சைக்கிள் 9 : மாலை 5 மணி முதல் 7 மணி வரை
- சைக்கிள் 10 : மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை
இதையும் படிங்க : கிரெடிட் கார்டு பயனர்களுக்கு அதிர்ச்சி.. இனி இந்த தேவைக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்த முடியாது.. ஆர்பிஐ முக்கிய உத்தரவு!
சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகள்
- சைக்கிள் 1 : நள்ளிரவு முதல் மாலை 4 மணி வரை
- சைக்கிள் 2 : மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை
மாற்றங்களின் முக்கிய அம்சங்கள் என்ன என்ன?
அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் தனி சுழற்ச்சியில் கையாளப்பட உள்ள நிலையில், பணப் பரிவர்த்தனைகள் மேலும் விரைவாகவும் எந்தவித தடையுமின்றி நடைபெறும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.