ஆண்டுக்கு வெறும் ரூ.565 செலுத்தினால் போதும்.. ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெறலாம்!
Post Office 10 Lakh Insurance Scheme | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு (Saving) மற்றும் முதலீட்டு (Investment) திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏழை, எளிய மற்று நடுத்தர மக்களை கருத்தில் கொண்டு பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் சாமானிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.565 முதலீடு செய்வதன் மூலம் ரூ.10 லட்சம் வரை காப்பீட்டு பெறலாம். அது என்ன திட்டம், அந்த திட்டத்தில் முதலீடு செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அஞ்சலகங்களில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய காப்பீட்டுத் திட்டம்
அஞ்சலகங்கள் மூலம் ஏற்கனவே அரசு பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், தற்போது புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நடுத்தர வர்கத்தினரை இலக்காக கொண்டு இந்த மலிவு காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஒரு அஞ்சல் அலுவலக வருடாந்திர காப்பீட்டுத் திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தில் என்ன என்ன சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
இதையும் படிங்க : Post Office Scheme : வட்டி மட்டுமே ரூ.29,776.. இந்த அஞ்சலக சேமிப்பு திட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா?
குறைந்த பிரீமியத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அசத்தல் திட்டம்
அஞ்சலகங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய திட்டம் குறைந்த பிரீமியத்தை கொண்ட திட்டமாக உள்ளது. அதாவது, ஆண்டுக்கு ரூ.565 பிரீமியம் செலுத்தினால் போதும். இந்த திட்டத்தில் ஒருவர் பிரீமியம் தொகையாக ஆண்டுக்கு ரூ.565 செலுத்தும் பட்சத்தில் அவருக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். இந்த திட்டத்தில் 18 வயது நிறைவடைந்தவர்கள் முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள் வரை என யார் வேண்டுமானாலும் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க : ரூ.10 லட்சம் வரை இன்சூரன்ஸ் கிடைக்கும் அஞ்சலக திட்டம்.. இத்தனை சிறப்பு அம்சங்களா?
திட்டத்தின் மேலும் சில முக்கிய அம்சங்கள்
- இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் நபர்கள், திட்டத்தில் சேறுவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனை அவசியமில்லை.
- இயற்கை மரணத்திற்கு மட்டுமன்றி விபத்து, பகுதி உடல் ஊனம் ஆகியவற்றுக்கும் பயனளிக்கும்.
- ஆயுள் காப்பீட்டை தவிர விபத்து ஏற்பட்டு காயமடைந்தால் உள் நோயாளி சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் ரூ.1 லட்சம் வரையிலான மருத்துவ சலுகைகளை பெற முடியும்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ள நபர்கள் தங்களது வீட்டிற்கு அருகே உள்ள தபால் நிலையத்திற்கு சென்று கணக்கை திறக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.